பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்

பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்
News Image

Chennai Infrastructure: சென்னையில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள்

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை பெருநகர மாநகராட்சியானது சுமார் 44 கோடி ரூபாய் செலவில் 36 புதிய பூங்காக்கள் மற்றும் 11 விளையாட்டு மைதானங்களை உருவாக்கவு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் உட்கட்டமைப்பு மற்றும் குடிமை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2026 தொடங்கி 2031 வரையிலான முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் நகர்ப்புற பசுமையாக்கம், பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி இடங்களுக்காக ஐந்தாண்டுகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு புதிய மைதானங்கள், பூங்காக்கள்:

சென்னையை பொறுத்தவரை ரூ.34.45 கோடி மதிப்பில் 36 பூங்காக்கள், ரூ.9.52 கோடி மதிப்பில் 11 விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருவதாக பெருநகர மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்தார். மாநகரம் முழுவதும் மணலி, தண்டையார்பேட்டை, ஆலந்தூர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 11 விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

பூங்காக்கள், மைதானங்களுக்கான அமைவிடங்கள்:

மணலி மண்டலத்தில், செந்தூர் குமரன் நகர், எலந்தனூர், பெரியார் நகர் மற்றும் அன்பு வளர்மதி நகர் ஆகிய இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில், மணலி சாலையில் உள்ள 2B பாலத்தின் கீழ் ஒரு பூங்கா அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், அம்பத்தூரில் உள்ள CTH சாலை, குமரன் நகர், பார்க் சாலை, குருசாமி தெரு, முகப்பேர் தொழிற்பேட்டை மற்றும் ஜீவன் பீமா நகருக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் பூங்காக்கள் அமையவுள்ளன.

இதையும் படியுங்கள்: கைதிகள் எஸ்கேப் ஆன விவகாரம் - 3 சிறைகளின் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மற்ற இடங்களில் ஆலந்தூரில் உள்ள கத்திப்பாரா - விமான நிலைய நுழைவாயில் மற்றும் விஐபி வருகை/புறப்பாடு பகுதி, தேனம்பேட்டையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் பீட்டர்ஸ் சாலை ஆகியவை அடங்கும். பெருங்குடியில், விஜிபி 7வது குறுக்குச் சாலை, - சாரதி நகர் 2வது சாலை மற்றும் பாலாஜி நகர் 19வது சாலை நெடுகிலும் பூங்காக்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் மண்டலத்தில், கண்ணகி நகரின் 3வது மற்றும் 4வது j பிரதான சாலைகள், ஆதித்யாராம் நகர் மற்றும் பல டிஎன்யு எச்டிபி தெருக்கள் உட்பட பல  இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் பசுமை இடங்களின் தேவை:

சென்னை பெருநகருக்கு கூடுதல் பசுமை இடங்களின் தேவை என்பது தீவிரமாக உள்ளது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள், ஒரு நபருக்கு 10-12 சதுர மீட்டர் திறந்தவெளி இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றன. ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் வெளியிடப்பட்ட, சென்னை பெருநகரப் பகுதிக்கான இரண்டாவது பெருந்திட்டம், 2026 (தொகுதி 3)-இன் படி, நான்கு மாநகராட்சிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகரப் பகுதியில் (CMA), அதன் புவியியல் பரப்பில் சுமார் 2% மட்டுமே அறிவிக்கப்பட்ட பூங்காக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி அதன் 15 மண்டலங்களில் சுமார் 1,000 பூங்காக்களையும் 400 விளையாட்டு மைதானங்களையும் பராமரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks