மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், இளையராஜா தாக்கல் செய்த மனு ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

என்னை கைது செய்யக் கூடாது என உத்தரவு வாங்கியிருந்தோம்.

மடப்புரம் அஜித் குமார் வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் , திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் , சார்பு ஆய்வாளர் சிவக்குமார், இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தோம். என்னை கைது செய்யக் கூடாது என உத்தரவு வாங்கியிருந்தோம். இந்த நிலையில் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு மாறானது. எனவே மதுரை மாவட்ட நீதிபதி , என்னை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

சாட்சிகளை கலைக்கக்கூடும் என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில்...,"விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தோம். ஏற்கனவே என்னை கைது செய்யக் கூடாது என உத்தரவு பெற்று இருந்தோம் என வாதிட்டார். பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இவர்கள் சாட்சிகளை கலைக்கக்கூடும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரரின் மனுக்களை தள்ளுபடி செய்து விசாரணையை 9 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டனர்.

Source: Read Full Article