தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திருமணத்திற்காக 8 கிராம் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அரசு வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி அளித்தது போல முதல் பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அண்ணன் சீர் திட்டம்

இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 4ம் தேதி அண்ணன் சீர் திட்டத்திற்கு 2026-27ம் ஆண்டிற்கு 60,000 தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரியுள்ளது.
இந்நிலையில் அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பாக வழிமுறைகள் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டத்தில் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம். அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

* மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.

* திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களுக்கான செயல்முறை

* விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.

* தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமணப் பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

* விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

* திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

* தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.

* விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

Source: Read Full Article