Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை

Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
News Image

Anbil Mahesh Bail Plea: திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா?

கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கான பல்வேறு அனுமதிகளை வழங்க, சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை சார்பில் கோரப்பட்டது. அதையேற்று ஒத்திவைக்கப்பட்ட விசாரணை, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷிற்கு இன்றாவது ஜாமின் கிடைக்குமா? என திமுக வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஜாமின் மனுவில் இருப்பது என்ன?

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நிராகரித்ததோடு, அவர் மீது குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிபதி விளக்கமளித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தனக்குத் தீவிர கணைய அழற்சி பாதிப்பு உள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் பிரத்யேக உணவு முறை தேவைப்படுகிறது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்” என அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் மற்றும் அன்பில் மகேஷின் ஓட்டுனர் ஆகியோரும் ஏற்கனவே சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காவல்துறை பதில்மனு தாக்கல் செய்த பிறகும் உடனடியாக அன்பில் மகேஷிற்கு ஜாமின் கிடைக்கும்? என்பதும் சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இருதரப்பு வாதங்களை கேட்க வேண்டியுள்ளதால் வழக்கில் உடனடி உத்தரவிற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

23 நாட்களாக சிறைவாசம்..!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர உரிமம் பெற்று தருவாதக் கூறி 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ம் தேதி  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளையுடன் அவருக்கான நீதிமன்ற காவல் வரும் முடிவடைவதால், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரலாம். இதனிடையே, தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி  அன்பில் மகேஷ் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, வரும் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks