செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி - அலறியதால் தப்பிய குழந்தை!

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி - அலறியதால் தப்பிய குழந்தை!
News Image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனியாக நடந்து வந்த 7 வயது சிறுமியை, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி சத்தமிட்டு கூச்சலிட்டதால், மர்ம நபர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செஞ்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது 7 வயது மகள் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு, பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிறுமியைப் பார்த்து ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளனர். மேலும், சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொள்ள வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி, உடனடியாக சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், மர்ம நபர்கள் ஆட்டோவை வேகமாக ஓட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியின் தந்தை அசோக்குமார் மூலம் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் செஞ்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுமியிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்து, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியில் இருந்து வந்தனர், எங்கு தப்பிச் சென்றனர் என்பது குறித்து போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் – சிறுமியின் தந்தை கோரிக்கை!

இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருவதாலேயே இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக சிறுமியின் தந்தை அசோக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மாதமாகியும் கிடைக்காத 6 வயது சிறுமி! செஞ்சி பகுதியில் தொடரும் பதற்றம்!

ஏற்கெனவே, செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹேமலதா மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 12-ம் தேதி காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடி முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், சிறுமி காணாமல் போய் ஒரு மாதமாகும் நிலையில், இதுவரை அவரைக் குறித்த உறுதியான தகவலோ, முக்கிய தடயமோ கிடைக்காதது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், செஞ்சி அருகே மீண்டும் ஒரு 7 வயது சிறுமியை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், செஞ்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks