திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
News Image

சென்னை: தமிழகத்தில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு, வெளியீட்டு நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு  தினமும் 6 காட்சிகளை திரையிடுவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களின் உழைப்பையும், உற்பத்தித் திறனையும் ஊக்குவித்து முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 20.30 மணி நேரம் திரையரங்குகளில் முடக்கி வைப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது ஆகும்.

தமிழக வரலாற்றில் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரைப்படங்களுக்கு திரையிட இதுவரை சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கபட்டதில்லை. இப்போதும் கூட அதற்கான தேவை எதுவும் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்தார்கள் என்பதற்காக அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கி தினமும் 6 காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. 1988&ஆம் ஆண்டு வரை ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 4 காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. 1988&ஆம் ஆண்டில் தான் விழாக்காலங்களில் ஐந்தாவது காட்சியை அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கடந்த சில ஆண்டுகளாக விழாக்காலங்களுக்கான 5 காட்சிகள் தவிர, படம் வெளியாகும் நாளில் மட்டும் அதிகாலை காட்சியை அனுமதிக்கும் புதிய வழக்கம் ஏற்பட்டது.

2023&ஆம் ஆண்டு ஜனவரி 11&ஆம் நாள் அதிகாலை அவ்வாறு திரையிடப்பட்ட திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களில் ஒருவர், சரக்குந்து மீது ஏறி நடனமாடி, தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், புதிய திரைப்படங்கள் வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்கும், விடுமுறை நாள்களிலும் 5 காட்சிகள் திரையிடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது அது 6 காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டுக்கோ, தமிழ்நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது; பாதிப்புகள் தான் ஏற்படும்.

தமிழக அரசின் ஆணைப்படி, ஒரு திரைப்படம் வெளியான நாளிலிருந்து 7 நாள்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படும். ஒரு வெள்ளிக்கிழமை வெளியாகும் திரைப்படத்தை இயல்பாக 7 நாள்களுக்கும், அடுத்த வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் 10 நாள்களுக்கும் 6 காட்சிகள் வீதம் திரையிட முடியும். ஒவ்வொரு வாரமும் ஒரு திரைப்படம் வெளியாகி வருவதால், அனைத்து நாள்களுமே திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிடப் படும். திரைத்துறையினரின் கோணத்திலிருந்து பார்த்தால், அனைத்து நாள்களும் 6 காட்சிகள் என்பது அவர்களுக்கான வருமானம்; பொதுமக்களின் கோணத்திலிருந்து பார்த்தால் அனைத்து நாள்களும் 6 காட்சிகள் வருமானம் மற்றும் பொருளாதார இழப்பு. இந்த விவகாரத்தை தமிழக அரசு பொதுமக்களின் பார்வையிலிருந்து தான் பார்த்திருக்க வேண்டுமே தவிர, திரைத்துறையினரின் பார்வையிலிருந்து மட்டும் பார்த்திருக்கக் கூடாது.

பொழுதுபோக்கு என்பது போகாத பொழுதை கடத்துவதற்கானதாக இருக்க வேண்டும்; மாறாக உழைக்கும்  மக்களின் பொழுதை திருடுவதாக இருக்கக் கூடாது. ஒரு நாளில் 20.30 மணி நேரம் திரையரங்குகள் இயங்கினால், அதை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அதனால், அவர்கள் உழைக்கும் நேரம் குறைந்து, மாநிலத்தின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். அதனால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையக் கூடும். இதே காரணத்திற்காகத் தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடியது. அதன் பயனாக மதுக்கடைகளின் வணிக நேரம் 16 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறான வகையில் திரையரங்குகளின்  காட்சி நேரத்தை 20 மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதுமட்டுமின்றி, 20 மணி நேரத்திற்கும் மேலாக திரையரங்குகள் இயங்கினால் குடும்பத்தினர் ஒன்றாக செலவிடும் நேரம் வெகுவாக குறையும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை, தேவையற்ற சண்டைகள்  என்பன போன்ற உளவியல் சார்ந்த சிக்கல்களும் ஏற்படும். இது முதலில் குடும்பத்தையும், பின்னர் சமூகத்தையும் பாதிக்கும். காலை 6.00 மணிக்கு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால், அதிகாலை 4.00 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட வேண்டும்; அதேபோல், அதிகாலை 2.30 மணிக்கு முடியும் திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் வீடு திரும்ப குறைந்தது 4.30 மணியாகி விடும். அந்த நேரத்தில், பொதுவெளியில் நடமாடும் பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்கள், நகைப்பறிப்பு போன்றவை நடத்தப்படலாம். இதனால் சட்டம் & ஒழுங்கு பாதிக்கப்படும்.

திரைத்துறை என்பது சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கம். மனிதகுலத்தின் மன அழுத்தங்களைப் போக்கும் முதன்மையான மருந்தும் அது தான். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று ஒரு நாளின் 86% நேரத்திற்கு திரையரங்குகளை இயக்குவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

திரைத்துறை என்பது நட்சத்திரங்கள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது அல்ல. திரைத்துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். அவர்களின் நலனுக்காகவாவது திரைத்துறை செழிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். தமிழ்த் திரையுலகில் சுமார் 2500 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. திரைப்படத் தயாரிப்பு செலவுகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. சிறு மற்றும் நடுத்தரத் தயாரிப்பாளர்களால் திரைப்படம் தயாரிக்க முடியவில்லை என உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் ஏராளமான உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை  எடுத்தால், ஒட்டுமொத்த திரையுலமும் ஆட்சியாளர்களை வாழ்த்தும். அது தான் தமிழகத்தின் இன்றையத் தேவை.

எனவே, உழைப்பையும், உற்பத்தித் திறனையும் கெடுக்கும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கல்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks