பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி

பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
News Image

TN Govt School Education Dept: முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மலைப்பகுதி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்துள்ளது.

4 முக்கிய டெண்டர்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், 2027-2028 கல்வி ஆண்டிற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை இணைப் பொருட்களுக்கு ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 52 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் மூலம் மாணவர்களுக்கான காலணி, காலுறை, கம்பளி ஸ்வெட்டர் மற்றும் ரெயின் கோட் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

மாணவர்களுக்கு ஸ்வெட்டர், ரெயின் கோட்

1. மாணவர்களுக்கான காலணி வழங்க டெண்டர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணி வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 37 கோடியே 24 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மாணவர்களுக்கான காலுறை வழங்க டெண்டர்

மாணவர்களுக்கான விலையில்லா காலணிகளுடன் வழங்கப்படும் காலுறைக்கான டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு 9 கோடியே 7 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Chennai Corporation: சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்

3. மலைப்பகுதி மாணவர்களுக்கு ரெயின்கோட்

மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலத்தில் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக பிரத்யேகமாக ரெயின்கோட் வழங்கப்படுகிறது. இதற்காக 3 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் வாயிலாக மொத்தம்  91 ஆயிரத்து 771 ரெயின்கோட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செர்ரி சிவப்பு நிறத்திலான ரெயின் கோட்கள் மாணவர்களுக்காக 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களின் பட்டியலில், கோவை, நீலகிரி, திண்டுக்கல் (கொடைக்கானல்), தர்மபுரி, ஈரோடு, சேலம் (ஏற்காடு), கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல் (கொல்லிமலை), தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர் (வால்பாறை), திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மலைப் பகுதி பள்ளிகள் அடங்கும்

4. பள்ளி மாணவர்களுக்கான கம்பளி ஸ்வெட்டர்

குளிர் அதிகம் உள்ள மலைப் பகுதி மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர் வழங்கவும் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான அடுத்தடுத்த திட்டங்கள்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த, தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முன்பு வழங்கப்பட்டு வந்த தரமற்ற சைக்கிள்களுக்கு மாறாக, ஹெல்மட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய தரமான மற்றும் நவீன சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நீட்சியாகவே தற்போது ஸ்வெட்டர், ரெயின் கோட் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கான டெண்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks