போலியான உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது - மூன்று துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல்.

மதுரையில் காவல்துறையினர் திடீர் ரோந்து பணி

மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அழகப்பன் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாமேந்திர குமார் திவாரி ( 41 ) மற்றும் அருண்குமார் சிங் ( 49 ) ஆகிய இருவரும் போலியான உரிமங்களை வைத்து போர்கன் வகை துப்பாக்கிகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணி செய்வது தெரியவந்துள்ள நிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article