சொத்து பத்திரம் இனி வீடு தேடி வரும்! 48 மணி நேரத்தில் தபாலில் வழங்க தமிழக அரசு அதிரடி திட்டம்!

சொத்து பத்திரம் இனி வீடு தேடி வரும்! 48 மணி நேரத்தில் தபாலில் வழங்க தமிழக அரசு அதிரடி திட்டம்!
News Image

சென்னை:  தமிழகத்தில் சொத்து வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல் சொத்து வாங்கி பத்திரப்பதிவு செய்தவர்கள், பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணங்களைப் பெறுவதற்காக மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டியதில்லை.

பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் அச்சிடப்பட்டு, இந்திய அஞ்சல் துறை மூலம் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கே விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் வழங்குவதற்கான காலவரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது.

இதற்காக பிரத்யேக அச்சு மையம் அமைக்கவும் தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய சிரமத்தைக் குறைக்கவும் பதிவுத்துறை சார்பில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'எங்கும் பதிவு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இணையவழியில் சொத்து ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் முதல் முறையாக மனை வாங்குபவர்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கான பதிவில் ஆளில்லா பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் சொத்து வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் அடையாளச் சரிபார்ப்பு, கைரேகைப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளைப் பாதுகாப்பான இணையவழியில் மேற்கொள்ள முடிகிறது.

இந்த முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டாலும், பொதுமக்களில் கணிசமானவர்கள் காகித வடிவிலான ஆவணங்களையே விரும்புகின்றனர். சொத்து வாங்கியதற்கான ஆதாரமாகவும், எதிர்காலத்தில் விற்பனை, அடமானம், வாரிசுரிமை உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்காகவும் அச்சிடப்பட்ட ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அச்சிட்டு, நேரடியாக வீட்டிற்கே அனுப்பும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மாநில அளவில் ஒருங்கிணைந்த அச்சு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் பிரத்யேக பாதுகாப்புத் தாளில் அச்சிடப்படும். சாதாரண காகிதங்களில் ஆவணங்களை அச்சிடுவதற்குப் பதிலாக, போலியாகத் தயாரிப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தாள்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஆவணமும் முறையான கண்காணிப்புடன் அச்சிடப்பட்டு, உரிய சரிபார்ப்புக்குப் பின்னர் அஞ்சல் துறையிடம் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம் ஆவணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவை தவறான நபர்களிடம் செல்வதற்கான வாய்ப்புகளையும் குறைக்க முடியும். அச்சிடப்பட்ட ஆவணங்களை இந்திய அஞ்சல் துறை பெற்றுக்கொண்டு, சொத்து வாங்குபவர் பதிவு செய்யும்போது அளித்துள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும். இதற்கான சேவை காலவரம்பும் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

தொலைதூர மாவட்டங்களுக்கு அங்குள்ள இடைவெளி மற்றும் அஞ்சல் விநியோக நடைமுறைகளுக்கு ஏற்ப தனித்தனியான காலவரம்புகள் நிர்ணயிக்கப்படும். இதனால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சொத்து வாங்குபவர்கள் பயனடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த அச்சு மையத்தை அமைத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான சேவை வழங்குநர் போட்டி ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்வு செய்யப்படும் தனியார் சேவை வழங்குநர் அச்சு இயந்திரங்களை நிறுவுதல், தேவையான பணியாளர்களை நியமித்தல், அன்றாட அச்சுப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார். அச்சு மையத்திற்குத் தேவையான இடவசதியை பதிவுத்துறை வழங்கும். அதேசமயம், அச்சிடப்படும் ஆவணங்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் ரகசியத்தன்மை ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு பதிவுத்துறையிடமே இருக்கும்.

சேவையில் குறைபாடு ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்கான நிபந்தனைகளும் ஒப்பந்தத்தில் இடம்பெற உள்ளன. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்புத் தாள்களை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடம் (TNPL) இருந்து பதிவுத்துறையே நேரடியாக கொள்முதல் செய்யும். பாதுகாப்புத் தாள்களின் இருப்பு, பயன்பாடு, கணக்கீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதற்காக அச்சு மையத்தை அமைக்கும் பணிகள், சேவை வழங்குநரைத் தேர்வு செய்யும் ஒப்பந்த நடைமுறைகள் உள்ளிட்டவற்றை பதிவுத்துறை மேற்கொள்ளும். மேலும், ஆவணங்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான நடைமுறைகள், விநியோகக் கண்காணிப்பு மற்றும் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆதாரங்களைப் பெறுதல் போன்ற அம்சங்களும் திட்டத்தில் இடம்பெறுகின்றன.

பொதுமக்களின் சொத்து ஆவணங்கள் என்பதால் தகவல் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அச்சு மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பின்னணி சரிபார்ப்பு, ஆவணங்களைக் கையாள்வதற்கான கட்டுப்பாடுகள், தகவல் ரகசியத்தன்மை, அவ்வப்போது தணிக்கை செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. மேலும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ, திருத்தப்படுவதையோ தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அச்சிடும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

சேவை வழங்குநர் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விரைவு அஞ்சல் மூலம் பதிவு ஆவணங்களை அனுப்புவதற்கு ஏதுவாக தமிழ்நாடு பதிவுச் சட்ட விதிகளிலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, 1949-ம் ஆண்டு தமிழ்நாடு பதிவுச் சட்ட விதிகளின் 109-வது விதியைத் திருத்தி, பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முத்திரையிடப்பட்ட உறைகளில் விரைவு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான சட்ட நடைமுறையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அச்சிடுதல் மற்றும் அஞ்சல் விநியோகத்திற்கான செலவுகள் பதிவுக் கட்டண நடைமுறையின் மூலம் வசூலிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இந்த அச்சு மையத்தை 2026-27-ம் நிதியாண்டில் அமைப்பதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. சேவை வழங்குநரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப் பணிகளை பதிவுத்துறை விரைவில் மேற்கொள்ளும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சொத்து வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்த பிறகு ஆவணங்களைப் பெறுவதற்காக மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் பெருமளவில் குறையும்.

குறிப்பாக, வெளியூரில் இருந்து சொத்து வாங்குபவர்கள், வயதானவர்கள், அலுவலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பல தரப்பினருக்கும் இந்த வசதி உதவியாக இருக்கும். டிஜிட்டல் பதிவுடன் காகித ஆவணங்களும் நேரடியாக வீடு தேடி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், தமிழகத்தின் பத்திரப்பதிவுத் துறையில் அடுத்தகட்ட மாற்றமாக அமைய உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks