தீபாவளி சர்ப்ரைஸ்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. நவம்பர் 4,5 தேதிகளில்.!

தீபாவளி சர்ப்ரைஸ்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. நவம்பர் 4,5 தேதிகளில்.!
News Image

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை வரிசையிலும், நேரில் சென்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்

இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத்திட்டத்தில் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

வீடு தேடி ரேஷன் பொருட்கள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் 19 மண்டலங்களில்

இந்நிலையில், நவம்பர் மாதத்தின் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத்  தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks