கைதிகள் எஸ்கேப் ஆன விவகாரம் - 3 சிறைகளின் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

கைதிகள் எஸ்கேப் ஆன விவகாரம் - 3 சிறைகளின் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
News Image

Prison Superintendents Transfer: மதுரை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்ட சிறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரம்:

தேனி மாவட்ட சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 36 மணி நேரத்திற்குள் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து, தப்பியோடிய அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் உட்பட மொத்தம் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் சங்கர்,  பிறப்பித்த அவசர உத்தரவின்படி மூன்று மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

3 மாவட்ட சிறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:

உடனடியாக அமலுக்கு வருவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறையில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்

கடலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன்,  R.கிருஷ்ணராஜ் மாற்றப்பட்டதால் காலியான மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வினோத், கடலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்

இதையும் படியுங்கள்: 40 வில்லாக்கள், விற்ற நிறுவனத்திற்கே குத்தகை, ரூ.1.8 கோடி வாடகை..! வசூலை வாரிக்குவித்த IAS-IPS ஜோடி..!

சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்த மாற்றம் வெறும் பெயரளவு மாற்றமாக அல்லாமல், பொறுப்புகளை எப்படி ஒப்படைக்க வேண்டும் என்று DGP மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணராஜ் தனது பொறுப்பை மதுரை சரக DIG முருகேசன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - முருகேசன் அவரிடம் இருந்து பரசுராமன் மதுரை சிறையின் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்

அதேபோல் வினோத், கிருஷ்ணராஜ் இடம் சேலம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்

பரசுராமன், வினோத் இடம் கடலூர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து அதிகாரிகளும் புதிய இடங்களில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும், பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் ஏற்பு விதிகளின்படி கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை:

தேனிக்கு முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்தும் இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் அரங்கேறியது. அடுத்தடுத்து கைதிகள் தப்பிய சம்பவத்திற்கு பிறகு சிறைத்துறையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், நிர்வாகத்தை சரி செய்யவும் சிறை கண்காணிப்பாளர்களின் அதிரடி பணியிட மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, சிறைத்துறை பாதுகாப்பை நவீனமயமாக்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமாரும் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks