தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?

தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
News Image

டெல்லியை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஐபோனை தீபாவளி பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.

தீபாவளியும் எதிர்பார்ப்புகளும்!

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வருவது வருவது பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள், இட்லியுடன் கறிக்குழம்பு, கொண்டாட்டம் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆனால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது பரிசுகளையும் போனஸ்களையும்  எதிர்நோக்கி இருக்கும் காலமாகும். பெரும்பாலான நிறுவனங்கள் பாரம்பரியமாக இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சில நிறுவனங்களில் போனஸ்கள் மட்டும் வழங்கப்படும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது எளிமையாக கூறப்போனால்,வாயை பிளக்க செய்துள்ளது. அந்நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் 'ஐபோன் 16' ஸ்மார்ட்போன்களைப் பரிசளித்து வியக்க வைத்துள்ளது.

ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

அந்நிறுவனம் ஊழியர்களுக்கு பரிசளித்தது மற்றும் அதனை ஊழியர்கள் கொண்டாடிய வீடியோ ஊடகங்களில் பரவி ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவைக்கண்டு திகைத்துப்போயுள்ள பிற நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும், தங்களுக்கு தீபாவளி வெகுமதிகளாக கிடைத்த இனிப்பு பெட்டகங்கள் போன்றவை குறித்து வசைபாடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு சிலர் ஐபோனை பரிசாக வழங்கிய நிறுவனம் குறித்த தேடலில் இறங்கி, அங்கு இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மொத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் தற்போதைய பிரதான இணையத்தேடலாக தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்ட விவகாரம் உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks