" பெற்றோரிடம் கதறி அழுத 12 வயது சிறுமி " அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளி கைது

" பெற்றோரிடம் கதறி அழுத 12 வயது சிறுமி " அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளி கைது
News Image

"காட்டுக்குள் தனியாக சென்ற சிறுமி"

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் , அப்பகுதியில் உள்ள காட்டு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியைப் பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் , திடீரென சிறுமியின் வாயைப்பொத்தி காட்டுப் பகுதிக்குள் கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்த சிறுமியை மயக்கமடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

"பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி"

சிறிது நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி , தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து உடனடியாக வீட்டிற்குச் சென்ற சிறுமி, நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமியைப் பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது 26) என்பது தெரிய வந்தது. இவர் அம்மிக்கல் விற்பனை செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி, 4 வயதல் ஒரு குழந்தையும் மற்றும் 7 மாத குழந்தை என இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

"இடது கால் முறிவு"

இதனைத் தொடர்ந்து காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த விஷ்ணுவை பிடிக்க நல்லூர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ்வரி , கவிதா, உதவி ஆய்வாளர் வேல்பாண்டி உள்ளிட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்ய முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் துரத்திச் சென்ற போது கீழே விழுந்ததில் அவரது இடது கால் உடைந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விஷ்ணுவை மருத்துவ சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks