விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!

விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
News Image

விழுப்புரம்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பிரதமரின் PM YASASVI திட்டத்தின் கீழ், 2026–27ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் PM YASASVI – Top Class Education in Schools திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள 100 சதவீத தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளிகளில் 2026–27ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை

இத்திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000 வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையும் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் 30 சதவீத இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்

2026–27ஆம் கல்வியாண்டிற்கான புதிய விண்ணப்பங்களை மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான https://scholarships.gov.in என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்க்க கடைசி நாள் டிசம்பர் 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், 2025–26ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.

OTR எண் பதிவு செய்வது எப்படி?

2026–27ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து OTR எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு OTR Number மற்றும் Password அனுப்பப்படும்.

அதனைப் பயன்படுத்தி தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பள்ளிகளின் விவரங்களைத் தலைமையாசிரியர்கள், தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்திலும் பள்ளிகளின் விவரங்களைப் பார்க்கலாம்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளமான https://socialjustice.gov.in ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks