ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்திய நாட்டின் பெருமையை உலகறிய செய்துள்ளார்.

42 ஆண்டுகால தேசிய சாதனையை தகர்தெறிந்த வீரமங்கை

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் நிகழ்த்திய சாதனை பிரமிக்கத்தக்கது. முன்னதாக 2023ஆம் ஆண்டு 400 மீட்டர் ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருந்த வித்யா ராம்ராஜ், இம்முறை 54.75 வினாடிகளில் இலக்கை அடைந்து அந்த 42 ஆண்டுக்கால சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். 3 ஆண்டுகள் இடைவெளியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 0.67 வினாடிகள் வரை வித்தியாசத்தை குறைத்திருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

வித்யா ராம்ராஜ் கடந்து வந்த பாதை

கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் தனது பள்ளி பருவத்தின் போது முதன் முதலில் ஹாக்கி விளையாட்டில் மட்டுமே ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், 7ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் பங்கேற்க தொடங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக 400 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவுக்கு மாறிய அவர், சென்னையில் உள்ள பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ரத்தோரிடம் தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஊன்றுகோலாக இருந்த தந்தையின் தியாகம்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வித்யாவிற்கு முறையான விளையாட்டு உடைகள், சத்தான உணவு மற்றும் பயிற்சிக் கட்டணங்களைச் சமாளிப்பது தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்துள்ளது. இருப்பினும் லாரி ஓட்டுநரான அவரது தந்தை ராம்ராஜின் தியாகங்கள் வித்யாவிற்கு மிகப்பெரிய ஊன்று சக்தியாக இருந்துள்ளது. இதுதொடர்பாக வித்யா கூறியதாவது, ”எனது தந்தை லாரி ஓட்டுநர் என்பதால் அவருக்கு பெரிதளவில் வருமான கிடையாது. எங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழல் மிகவும் மோசமாக இருந்தது. ஆனாலும், என் தந்தை பட்டினி கிடந்து நான் போட்டிகளில் விளையாட எனக்கு தடகள் ஷூக்களை வாங்கி கொடுத்தார்".

"மதிய உணவுக்கு பதிலாக டீ அல்லது பிஸ்கட்டை சாப்பிட்டு பணத்தை சேமித்து என் தந்தை எனக்கு ஷீ வாங்கி கொடுத்தார். எனது கனவை நினைவாக்க அவர் செய்த தியாகம் கொஞ்சம் நஞ்சமல்ல. சிறுவயதில் அவரது தியாகத்தின் ஆழம் எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது சர்வதேச அரங்கில் சாதிக்கும் போது அது புரிகிறது. என் தந்தை செய்த தியாகங்களுக்கு கைமாறாக இந்த வெற்றிகளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்" இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

கேலி செய்தவர்களுக்கு பதக்கங்கள் மூல பதிலடி

தனது இளமை பருவத்தில் தடகள போட்டிகளில் ஓட தொடங்கிய போது, சிலர் பெண் தானே எவ்வளவு காலம் ஓட முடியும், திருமணம் செய்து ஆக வேண்டுமே என ஏளனமாக பேசியதை நினைவு கூர்ந்த வித்யா, ஆனால் இப்போது 28 வயதிலும் அதே உத்வேகத்துடன் தான் ஓடுவதை பார்த்து அவர்கள் வாயடைத்து போய்விட்டதாக குறிப்பிட்டார்.

3 பதக்கங்கள் வென்று சாதனை

நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை தன் வசப்படுத்தியுள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமு, 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 4x400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்று அவர் அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே ஆசிய விளையாட்டு தொடரில் 3 வித பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

முதல்வர் விஜய் அறிவித்த பரிசு

ஆசிய தடகள போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜிற்கு முதலமைச்சர் விஜய் பரிசுத் தொகைகளை அறிவித்தார். அதன்படி, தங்கப் பதக்கத்திற்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கத்திற்கு 50 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கத்திற்கு 30 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் தமிழக வீராங்கனை வித்யா பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

Source: Read Full Article