Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?

Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
News Image

தமிழக வெற்றிக் கழக அரசின் முத்தான திட்டமான வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

இலவச பேருந்து பயணம்

கடந்த திமுக ஆட்சியில் விடியல் பயணம் என்ற பெயரில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மகளிருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. மாநகர பேருந்துகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மாநகர பேருந்துகளில் மட்டுமே இருந்த இந்த இலவச பயண திட்டத்தை தமிழ்நாடு முழுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் வகையில் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வெற்றிப் பயண திட்டம்

அதன்படி இந்த திட்டத்துக்கு வெற்றிப் பயண திட்டம் என பெயரிடப்பட்டது.  தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண்கள் மட்டுமின்றி திருநர்களும் இந்த திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் தமிழ்நாடு முழுக்க பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாநகரம் மற்றும் நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர், மலைப் பகுதி சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளிலும் இந்த இலவச பேருந்து பயண திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்துகாக ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 6,000 கோடி செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 12,692 பேருந்துகள் இயக்கப்பட்டு அதன் மூலம்  தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதூர சொகுசு, குளிர்சாதன  மற்றும் படுக்கை வசதிப் பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. படிப்படியாக இந்த வகை பேருந்துகளுக்கும் கட்டணமில்லா சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி பிறந்தநாளில் ஏன் தொடக்கம்?

இந்த இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை கோயம்பேட்டில் இன்று (அக்டோபர் 2) தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்த வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த திட்டத்தை அக்டோபர் 2ம் தேதி விஜய் தொடங்கி வைக்க காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது காந்தியடிகள் பெண்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து பல கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்படியான பெண்கள் பாதுகாப்பிலும், அவர்களின் உரிமையை பேணுவதிலும் மிகுந்த கவனம் கொண்டுள்ள தவெக அரசு இந்த நாளில் மகளிருக்கான திட்டத்தை தொடங்கினால் சரியாக இருக்கும் என நினைத்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks