TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்

TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக-விற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்:

இவர்களில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தவிர மற்ற கட்சியினர் தவெக கூட்டணியில் உள்ளனர். மாநில அரசாக தவெக ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சி அதிகாரங்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக கைவசமே உள்ளது. இதனால் கீழ்மட்டம் வரை தவெக அரசு முழுமையாக செயல்படுவதில் பல சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனால், உள்ளாட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள தவெக அதற்கான பணிகளை வலுப்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்பில் திமுக வலுவாக உள்ள நிலையில், தவெக-வை கீழ்மட்டம் வரை மிகவும் வலுவாக அமைக்க ஆட்சி அமைந்தது முதலே பணிகள் நடைபெற்று வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு 15 சதவீதம்:

சட்டசபைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலைச் சந்தித்த தவெக, உள்ளாட்சித் தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் பெரும் சவால் இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் பெரும்பான்மை அதிகாரத்தைக் கைப்பற்ற தவெக முனைப்பு காட்டி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு 15 சதவீதம் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக இடங்களுக்கு அடிபோடும் கூட்டணி கட்சிகள்:

இதற்காக, தவெக-வின் முக்கிய தலைவர்களான அமைச்சர்கள் சிலர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தவெக ஆட்சியில் அமர்வதற்கு பக்கபலமாக இருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களைப் பெறுவதற்கு முடிவு செய்துள்ளன. தங்கள் கட்சிகள் எந்த பகுதியில் எல்லாம் பலமாக உள்ளனரோ? அந்த பகுதிகளில் தங்கள் கட்சிகளுக்கு சீட்டு வழங்க தவெக-விற்கு அழுத்தம் தர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

என்ன முடிவு எடுக்கும் தவெக?

மாநகராட்சிகள், நகராட்சிகள் சிலவற்றையும் தங்களுக்காக கேட்பதற்கும் கூட்டணி கட்சிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே தவெக விரும்புகிறது.கூட்டணி பங்கீட்டை எந்த வித முரண்பாடும் இல்லாமல் முடிப்பதற்காக தற்போது முதலே தவெக காய் நகர்த்தி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks