முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா

முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
News Image

"4 மணி நேரம் விசாரணை"

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்  திமுக மூத்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். நான்கு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் ;

விசாரணை சிறப்பாக நடைபெற்றது விசாரணையில் என் அப்பா பெயர் என்ன எத்தனை குழந்தைகள் உற்றார் உறவினர் சொந்த ஊர் என இது போன்ற பொதுவான கேள்விகளை 25 நிமிடம் கேட்கப்பட்டது. மீதமுள்ள விசாரணையில் சைதாப்பேட்டையில் பேசிய பொழுது கலவரம் ஏதேனும் நடைபெற்றதா தொண்டர்கள் கொந்தளித்தார்களா என்ற கேள்விகளே கேட்கப்பட்டது வேறு ஏதும் புதிதாக கேட்கப்படவில்லை.

எதற்காக இந்த விசாரணை நடைபெற்றது என்று காவல் துறையினருக்கே தெரியவில்லை , விசாரணை முடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் இப்போது தான் வெளியே வருகிறோம். என்னிடம் விசாரணைக்கு அழைத்து எந்த விதமான FIR மற்றும் புகார் சான்றிதழும் வழங்கப்படவில்லை. புகார் மனுவும் வழங்கப்படவில்லை பொதுவெளியிலும் எந்த புகாரின் கீழ் நான் விசாரிக்கப்படுகிறேன் என்று வெளியிடப்படவில்லை.

"காவல் துறையினருக்கு தான் மன உளைச்சல்"

சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இருக்கும் அலுவலர்கள் அனைவரும் பாவம் அவர்களுக்கு எங்கிருந்தோ அழைப்புகள் வருகிறது. ஆனால் அவர்களை மன்னித்து விடுவோம். தவெக அரசுக்கு திமுக பற்றி தெரியாது திமுகவினரை தவெகவினர் எதுவும் கிழிக்க முடியாது.

நேற்று நடைபெற்ற டிராமா , இன்று நடைபெற்ற டிராமா , நாளை நடைபெற உள்ள டிராமாக்கள் இதனைக் கண்டு சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும். விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமான ஆட்சி நடைபெறுகிறது. இதை அனைத்தையும் மூடி மறைக்க இதே போன்ற திசை திருப்பல்கள் நடைபெறுகிறது. நாங்கள் எந்த விதமான மன உளைச்சலும் ஆகவில்லை எங்களை அழைத்துச் சென்ற காவல் துறையினருக்கு தான் மன உளைச்சல்.

"முதலமைச்சர் நல்லவர் தான்"

17 கைதிகள் தப்பித்து சென்றது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு , இவர்களே கைதிகளை தப்ப வைத்து விட்டு இவர்களே பிடிப்பது போல் தோன்றுகிறது.  இவர்கள் கைதிகளை இமாலயத்தில் பிடிக்கவில்லை. சென்னை அண்ணாநகரில் தான் கைப்பற்றினார்கள். நிரம்பாத அணைக்கு இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முதலமைச்சர் தான் பாவம் அவர் நல்லவர் தான் இன்னும் சில நாட்களுக்கு தான் இது நீடிக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks