Tamil Nadu Weather Update (02-10-2026): சென்னையில் இன்று லேசான மழைக்கே வாய்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இவற்றின் விளைவாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கான வானிலை:

03-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

04-10-2026; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அக்டோபர் இந்தியாவில் மழைப்பொழிவு முன்னறிவிப்பு

இதனிடையே அக்டோபர் மாதத்திற்கான வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 2026-ல், தமிழ்நாட்டின் தென் பகுதிகளின் பல இடங்கள், வட தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் கேரளாவின் மலைப்பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவுகிடைக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியின் மீதமுள்ள பெரும்பாலான மழைப்பொழிவுகிடைக்க வாய்ப்புள்ளது. பகுதிகளில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்: TN Govt: திமுக சம்பவம், CMDA முடித்த 101 திட்டங்கள்..! பராமரிப்பை ஏற்க மறுக்கும் மற்ற துறைகள் - பிரச்னை என்ன?

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெப்பநிலை முன்னறிவிப்பு

இந்தப் பருவத்தில், தென் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. நீட்டிக்கப்பட்ட கால (Extended range) மற்றும் குறுகிய முதல் நடுத்தர கால வானிலை(Short to medium range) முன்னறிவிப்பு சேவைகள் பருவகால முன்னறிவிப்புகளுக்கு கூடுதலாக, இந்திய வானிலை ஆய்வுத் துறை நாடு முழுவதும் அடுத்த நான்கு வாரங்களுக்கான மழைப்பொழிவு மற்றும் அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைக்கான நீட்டிக்கப்பட்ட கால முன்னறிவிப்புகளை வழங்குகிறது” என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article