TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்

TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
News Image

Tamil Nadu Weather Update (28-10-2026): தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.

இன்றைய தமிழக வானிலை

அதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

28-10-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

28-10-2026 முற்பகல் வரை: சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-10-2026 மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 29-10-2026 காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு படிப்படியாக குறையக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

28-10-2026: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அந்தமான் கடல் பகுதிகள்:

28-10-2026 முதல் 30-10-2026 வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள்:

இன்று அதிகாலை முதல் நண்பகல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-10-2026 மாலை காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 29-10-2026 காலை காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு படிப்படியாக குறையக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென” வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks