TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?

TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
News Image

TN Registrar Office: தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் இயங்கி வரும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு ரத்து..!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் 2026-27-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை எண். 11. முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு விவாதத்தின் போது வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, "வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி, தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை 01.11.2026 முதல் கைவிடலாம் என அரசு முடிவு செய்துள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு ஏன்?

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளன்று சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவும், அந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் அதன் வேலைப்பளுவிற்கு தகுந்தாற்போல் தேவையான பணியாளர்கள் பணிபுரிய சம்மந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்களுக்கு உத்தரவிடவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது. பதிவுத்துறை தற்போது "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது என்றும், சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி. பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஊழியர்களுக்கு பணிச்சுமை..!

சனிக்கிழமைகளிலும் பதிவு மேற்கொள்ளப்படுவதால், தொடர்ந்து அலுவலகப்பணிகளில் ஆவணப் பின்னடைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவு சேவைகளின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையினை கைவிடலாம் என, வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் 07.09.2026 அன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.  அதனை  01.11.2026 முதல் செயல்படுத்த ஏதுவாகவும், பழைய அரசாணையை ரத்து செய்து உரிய ஆணை வெளியிடுமாறு பதிவுத்துறை தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு

100 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இனி சனிக்கிழமை இயங்காது..!

பதிவுத்துறை தலைவரின் கருத்துருவினை கவனமாக பரிசீலனை செய்தபின், அவரின் கருத்துருவினை ஏற்று 2026-2027 ஆம் ஆண்டு பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பான 'வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்பது தொடர்பான அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, இதுநாள் வரை சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks