TN Govt Staff Assets: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு உத்தரவு:

தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ல் இதனை பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும் எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த நபர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவரங்கள் கட்டாயம் விதி

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியிலேயே ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதங்களில் தங்களது சொந்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதோடு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சொத்து விவரங்களை சமர்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தான், சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

இதையும் படியுங்கள்: TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை

அக்.31 வரை அவகாசம் - அரசு திட்டவட்டம்

தலைமை செயலாளர் சாய்குமார் கடந்த 5ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையாக சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விபரங்களையும், வரும், அக்டோபர் 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு யார் பெயரிலும், அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தாலும், அவற்றையும் குறிப்பிட்டு, அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த காலகட்டத்திற்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான், அவர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பெறும். சொத்து விபரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாகவும் கருதப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஷாக்..!

அரசு ஊழியர்கள் தங்களது வீடு, நிலங்கள், நகைகள், கார், இருசக்கர வாகனங்கள், ரொக்கம், கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்குவதையும், சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவிப்பதையும், பினாமி பெயர்களில் சொத்துகளை மறைப்பதையும் தடுக்கும் விதமாகவே, அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என அறிவுறுத்திய பிறகும் கூட, பலர் இன்றளவும் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலான அரசின் புதிய உத்தரவு, ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பொதுமக்களிடையே இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளதோடு, அறிக்கையோடு நிறுத்தாமல் இதனை முறைப்படி செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article