சுமை இறக்கி… சுமைதாங்கி போன கல்! கிராமத்து சாலையோரம் சொல்லும் நூற்றாண்டு கதை!

சுமை இறக்கி… சுமைதாங்கி போன கல்! கிராமத்து சாலையோரம் சொல்லும் நூற்றாண்டு கதை!
News Image

தஞ்சாவூர்: கிராமத்து சாலையோரம் ஊரின் நுழைவுப்பகுதி என ஆங்காங்கே கண்ணில் படும் ஒரு பழமையான கல் அமைப்புதான் சுமைதாங்கி கல்.

இன்றைய தலைமுறைக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அந்த சுமைதாங்கி கல்லுக்குப் பின்னால் ஒரு காலத்தின் வாழ்க்கை முறையும், மனிதநேயமும், சமூக அக்கறையும் புதைந்து கிடக்கிறது.

வாகன வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவைதான் இவை. நீண்ட தூரம் நடந்து செல்லும் மக்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்ற பொருட்களை சிறிது நேரம் இறக்கி வைத்து ஓய்வெடுக்க இந்தக் சுமைதாங்கி கற்கள் பயன்பட்டுள்ளன. இன்றைக்கு ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்குச் செல்ல பஸ், கார், இருசக்கர வாகனம் என பல வசதிகள் உள்ளன. ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்பு நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.

காய்கறிகள், தானியங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், உறவினர் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பொருட்கள் என பலவற்றையும் மக்கள் தலையில் சுமந்தபடியே பல மைல்கள் நடந்தனர். நீண்ட நேரம் நடந்து செல்லும்போது சுமையை தொடர்ந்து தலையில் வைத்திருப்பது உடல் சோர்வை ஏற்படுத்தும். அப்போது சாலையோரத்தில் தென்படும் சுமைதாங்கி கல் அவர்களுக்கு ஒரு சிறிய ‘ஓய்விடமாக’ இருந்தது. சுமையை கல்லின் மேல் வைத்துவிட்டு சில நிமிடங்கள் இளைப்பாறலாம். பின்னர் மீண்டும் அதை எளிதாக எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டு பயணத்தைத் தொடரலாம். யார் உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் தேவையில்லை. இவ்வாறு மக்களின் உடல் உழைப்பைக் குறைக்க உருவாக்கப்பட்ட எளிய கட்டமைப்பாக சுமைதாங்கி விளங்கியது.

சுமைதாங்கியின் சிறப்பு அதன் பயன்பாட்டில் மட்டுமல்ல. அதன் பின்னால் இருந்த மனிதநேய சிந்தனையும் குறிப்பிடத்தக்கது. தங்கள் காலத்தில் சுமைதாங்கியை பயன்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினரும், ஊர் வழியாகச் செல்லும் யாராக இருந்தாலும் சுமையை இறக்கி வைத்து ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக பொதுப் பயன்பாட்டுக்காக இவை அமைக்கப்பட்டன. சில இடங்களில் சுமைதாங்கிகள் குடும்ப உறுப்பினர்களின் நினைவாகவும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்களின் நினைவாகவும், இறந்த உறவினர்களின் நினைவாகவும் சுமைதாங்கி அமைக்கும் மரபு இருந்ததாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.

இதனால், ஒரு கல் வெறும் ஓய்வுக்கான பொருளாக இல்லாமல் நினைவு, அறம், கொடை, மனிதநேயம் ஆகியவற்றின் அடையாளமாகவும் மாறியது. வரலாற்று ஆர்வலர்கள் குறிப்பிடும் மற்றொரு முக்கிய அம்சம் இதன் வகைப்பாடு. சுமைதாங்கி கற்களை எல்லாம் நடுகற்களாக கருதிவிட முடியாது. நடுகற்கள் பெரும்பாலும் வீர மரணம், சமூகத்துக்காக உயிர்நீத்தவர்கள் உள்ளிட்ட நினைவுகளைப் பதிவு செய்யும் மரபுடன் தொடர்புடையவை.
சங்க காலத்திலேயே வீரர்களுக்காக நடுகல் அமைக்கும் வழக்கம் இருந்ததற்கான இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன.

அதேநேரத்தில், சில பகுதிகளில் பழைய நினைவுக்கற்கள் காலப்போக்கில் வேறு பயன்பாடுகளுக்கும் மாறியிருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே ஒவ்வொரு பழமையான கல்லையும் அதன் அமைப்பு, கல்வெட்டு, சிற்பம், அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். போக்குவரத்து வசதிகள் அதிகரித்த பிறகு சுமைதாங்கிகளின் அன்றாட பயன்பாடு படிப்படியாக குறைந்தது. சைக்கிள், பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் என போக்குவரத்து வளர்ந்ததால் தலையில் சுமை சுமந்து பல மைல்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையும் குறைந்தது.

இதனால் பல சுமைதாங்கிகள் பயன்பாடின்றி மறைந்து வருகின்றன. சில இடங்களில் செடிகள், கொடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில கற்கள் சாலை விரிவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளின்போது அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் சில கிராமங்களில் இவை பழைய கால வாழ்க்கையின் அமைதியான சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை, புதுக்கல்விராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமைதாங்கி கற்கள் இன்றும் தங்களின் வலுவை நிரூபித்து வருகின்றன.

இன்றைய தலைமுறைக்கு சுமைதாங்கி கல் தேவையற்றதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கல்லைச் சுற்றி ஒரு காலத்தின் சமூக வாழ்க்கை அமைந்திருந்தது. போக்குவரத்து இல்லாத காலத்தின் பயணம், தலையில் சுமந்த உழைப்பு, வழிப்போக்கருக்கான ஓய்வு, முன்னோர்களின் நினைவு, பொதுநல சிந்தனை, மனிதநேயம் என பல வரலாறுகளை ஒரே கல் தன்னுள் சுமந்து நிற்கிறது.

அதனால் கிராமங்களில் எஞ்சியுள்ள சுமைதாங்கிகளை வெறும் பழைய கற்களாக பார்க்காமல், அவற்றின் பின்னணியை அறிமுகப்படுத்தினால், புத்தகங்களில் மட்டுமல்லாமல் தங்கள் ஊரின் மண்ணிலும் வரலாறு இருக்கிறது என்பதை அடுத்த தலைமுறை உணர முடியும்.

ஒருகாலத்தில் மனிதர்களின் சுமையைத் தாங்கிய இந்தக் கல்... இன்று ஒரு தலைமுறையின் வரலாற்றையே தாங்கி நிற்கிறது என்பதுதான் அழியாத, அழிக்க முடியாத உண்மை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks