TN Govt: திமுக சம்பவம், CMDA முடித்த 101 திட்டங்கள்..! பராமரிப்பை ஏற்க மறுக்கும் மற்ற துறைகள் - பிரச்னை என்ன?

TN Govt: திமுக சம்பவம், CMDA முடித்த 101 திட்டங்கள்..! பராமரிப்பை ஏற்க மறுக்கும் மற்ற துறைகள் - பிரச்னை என்ன?
News Image

TN Govt CMDA:  முடிக்கப்பட்ட 101 திட்டங்களின் பராமரிப்பு பணிகளை ஏற்க மற்ற துறைகள் மறுப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் புதிய பிரச்னை வெடித்துள்ளது.

CMDA-வில் திமுக செய்த சம்பவம்..!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனப்படும் CMDA அமைப்பானது, தலைநகரின் வளர்ச்சிப் பணிகளை ஒழுங்குபடுத்தவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.
சென்னையின் நிலப் பயன்பாட்டை முறைப்படுத்தி, குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு வகைப்படுத்துதல்,   எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பெருந்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துதல் மற்றும் விதிகளைப் பின்பற்றி கட்டப்படும் பெரிய கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு திட்ட அனுமதி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள  இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த திமுக ஆட்சியின் போது திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதை தாண்டி, நேரடியாக திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது CMDA அமைப்பில் மிகப்பெரிய பிரச்னை வெடித்துள்ளது.

கட்டுமான பணிகளில் இறங்கிய CMDA:

CMDA மூலம் சிறிய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வடசென்னை வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது. வெறும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பீடானது நாளடைவில் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக விஸ்வரூபமடைந்தது. பெருநகர வளர்ச்சி குழுமம் சார்ந்தது மட்டுமின்றி சென்னை மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை மருத்துவத்துறை மற்றும் போக்குவரத்து துறை என 10 துறைகளும் இந்த வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் அந்த துறைகளுக்கான நிதியை வழங்காமல் அப்போதைய அமைச்சர் சேகர்பாபு கட்டுப்பாட்டில் இருந்த சிஎம்டிஏ அமைப்பே நேரடியாக கட்டுமான பணிகளை மேற்கொண்டது. இது பல துறைகளிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 135 திட்டங்களுக்காக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில், அதில் 101 திட்டங்கள் முடிவுற்று கடந்த திமுக ஆட்சியிலேயே திறப்பு விழாவும் அரங்கேறியது.

பராமரிப்பில் சிக்கல்..!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருமண மண்டபங்கள், முதல்வர் படைப்பகம், காவல் நிலையம், டிஜிட்டல் நூலகம், சூழலியல் பூங்கா, பள்ளிக்கட்டிடம் மற்றும் பேருந்து நிலையம் போன்றவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பராமரிப்பு பொறுப்பானது தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அப்படி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தற்போது படிப்படியாக முடிவை நெருங்கி வருகின்றன. அவற்றை புதுப்பிக்க புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில், CMDA நிர்வாகம் நிதி சிக்கலில் தவித்து வருகிறது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவற்றின் பராமரிப்பு பணிகளை அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்பிட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதியுள்ளது.

இதையும் படியுங்கள்: Train CMRLS: ரூ.6,600 கோடியில் மெகா ப்ராஜக்ட்..! சென்னையில் 25KM-க்கு சொகுசு பயணம், 21 ரயில் நிலையங்கள் - முழு விவரம்

ஏற்க மறுக்கும் துறைகள்..!

ஆனால், சிஎம்டிஏவின் கோரிக்கையை ஏற்க துறைசார் அதிகாரிகள் மறுத்து வருகின்றனராம். ஏற்கனவே தங்கள் வசம் உள்ள பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  சிஎம்டிஏவால் செய்து முடிக்கப்பட்ட திட்டங்களின் பராமபரிப்பு பொறுப்பை நாங்கள் ஏற்றால், அதற்கு எப்படி நிதி ஒதுக்க முடியும்? என அந்தந்த துறைகள் கேள்வி எழுப்பியுள்ளனவாம். அரசு தலையிட்டு கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே இந்த திட்டங்களை பராமரிக்க முடியும், இல்லையென்றால் யாருக்கும் பயனில்லாமல் முடங்கிவிடும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், சில திமுக அமைச்சர்களின் பணத்தை சுருட்டும் ஆசையால் செயல்படுத்த திட்டங்களானது, தற்போது அரசுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks