TN Govt IAS Transfer: தமிழ்நாடு முழுவதும் 13 IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம்

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பதவிகளை வகித்து வந்த 13 IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 3 மாவட்ட ஆட்சியர்கள், ஒரு மாநகராட்சி ஆணையர், 2 பெரிய நிறுவனங்களின் MD மற்றும் புதிதாக IAS ஆக பதவி உயர்வு பெற்ற 9 பேர் அடங்குவர். தென்காசி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்.

3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்:

தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா நியமனம். திருநெல்வேலி மாநகர ஆணையராக இருந்த நிலையில் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த த C.முத்துக்குமரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றப்பட்டுள்ளார்

புதிதாக IAS பணியில் இணைந்த S.பிரசன்னா ராமசாமி, (ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களுக்கான துணை செயலாளராக இருந்தவர்) கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதையும் படியுங்கள்: TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்

9 பேருக்கு பதவி உயர்வு

மாநில பணியில் (State Service) இருந்து IAS பணிக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்துமதி போக்குவரத்து துறையில் அரசு துணை செயலாளராக நியமனம்

சென்னை மாநகராட்சி அம்மா உணவகத்தின் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த சங்கீதா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் (ICDS) இயக்குனர் மற்றும் மிஷன் இயக்குனராக நியமனம்

சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி-10 ஆக இருந்த காளிதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரகத்தில் கூடுதல் இயக்குனராக (பொது) நியமனம்

கரூர் துணை ஆட்சியராக இருந்த வெங்கடேஷ்வரன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணை ஆட்சியராக மாற்றம்

இ-ஆளுமை இயக்குனரகத்தில் இணை இயக்குனராக (தொழில்நுட்பம்) இருந்த பிரியா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமனம்

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (ELCOT) பொது மேலாளராக (கொள்முதல்) இருந்த ராஜாகிருபாகரன், ELCOT நிறுவனத்தின் செயல் இயக்குனராக நியமனம்

CMDA-வில் வந்த மாற்றம்:

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையில் அரசு கூடுதல் செயலாளராக மாற்றம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மனிஷ் S. நர்னாவரே, தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமனம்

சமூக நலத்துறை கூடுதல் செயலாளராக இருந்த வளர்மதி வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனராக நியமனம்

Source: Read Full Article