TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!

TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
News Image

பள்ளிகளிலும் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூலை 4, 5-ம் தேதிகளில் தாள்-1, தாள்-2 தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 12ம் தேதி வெளியானது. இரண்டு தேர்வுகளையும் சேர்த்து 2,17,519 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 1,09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அதாவது 50.66 சதவீதம் பேர் தோல்வி அடைந்தனர்.

ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் டிசம்பர் மாதம் 20ம் காலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிற்பகலில் தாள்-1 தேர்வும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

இதில் விண்ணப்பிக்கும் போது புதிதாக பணிச்சான்று பெற்று பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிதாக பணிச்சான்று பெற காலதாமதமாகும் என்பதால் ஏற்கெனவே பெற்ற சான்றையே பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!

30 மதிப்பெண்ணை 60ஆக மாற்றலாம்

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் கூறுகையில்: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்-30, ஆங்கிலம்- 30, சமூக அறிவியல்- 60, உளவியல்- 30 என மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழாசிரியர் தமிழ்ப்பாடத்தை தவிர வேறு பாடம் நடத்தக்கூடாது என விதியிருக்கும்போது தமிழ்ப்பாட ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்திலிருந்து 60 மதிப்பெண்ணுக்கு ஏன் தேர்வு எழுத வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தவிர்த்துவிட்டு தமிழ்ப்பாடத்தில் 30 மதிப்பெண் என்பதை 60 மதிப்பெண் என மாற்றலாம். அதேபோல் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும் இதேபோல் கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks