4 மாத ஊதியம் இல்லை: தீபாவளிக்கு முன் தொழிலாளர்களுக்கு வழங்க அன்புமணி கோரிக்கை!

4 மாத ஊதியம் இல்லை: தீபாவளிக்கு முன் தொழிலாளர்களுக்கு வழங்க அன்புமணி கோரிக்கை!
News Image

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும்  மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்க்கு கடந்த இரு மாதங்களாகவும்,  வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையிலும்  நியமிக்கப்பட்ட இந்த ஏழைத் தொழிலாளர்களை மாதக் கணக்கில் ஊதியம் வழங்காமல் துயரத்திற்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது.

மாநகராட்சி சமூகநலக் கூடங்கள் ஒவ்வொன்றிலும் தலா 3 பாதுகாவலர்கள், 3 பராமரிப்புப் பணியாளர்கள்  பணியாற்றி வருகின்றனர். அவர்களை மோனிஷா  செக்யூரிட்டி ஏஜென்சி  என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் தான் குத்தகை அடிப்படையில்  பணியமர்த்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்பட்டாலும் கூட,  பணி ஆணை இன்னும்  வழங்கப்படவில்லை.  அதனால் அந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தத் தொகையை சென்னை மாநகராட்சி இன்று வரை விடுவிக்கவில்லை. அதைக் காரணம் காட்டி சமூகநலக் கூட பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை.

இன்னொருபுறம், தமிழ்நாட்டில்  59 இடங்களில் செயல்பட்டு வரும் சகி  ஒருங்கிணைந்த சேவை மையங்களில்  மைய  நிர்வாகி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, மூத்த ஆலோசகர், களப் பணியாளர்கள், பாதுகாப்புக்காவலர்கள் ,  பன்முக உதவியாளர்கள்  உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்றி வரும்  700-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு  தொடர்ந்து 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, மையங்களின் பராமரிப்பு செலவுகளுக்குக் கூட நிதி வழங்கப்படாததால்  அவர்கள் கடன் வாங்கி மையத்தின் அடிப்படைச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சகி  ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களுக்கு  3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை சுட்டிக்காட்டி கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர்களுக்கு  ஊதியம் வழங்கப்படவில்லை. அக்டோபர் மாதம்  நாளையுடன்  முடிவடையவுள்ள நிலையில், அதற்கான ஊதியம் எப்போது தான் கிடைக்குமோ? என்ற கவலையில் பணியாளர்கள்  ஆழ்ந்துள்ளனர்.

சமூக நலக் கூட  பணியாளர்களாக இருந்தாலும், சகி  மைய பணியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பொருளாதார அடிப்படையில் பலவீனமானவர்கள். அன்றாடக் குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள் ஆகியவற்றுக்கு  அரசால் வழங்கப்படும் ஊதியம் போதவே போதாது. ஆனாலும், வேறு வாழ்வாதாரம் இல்லாமல் தான் அவர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கான குறைந்த ஊதியத்தைக் கூட  நான்கு மாதங்களாக வழங்காமல்  தாமதிப்பது நீதியல்ல.

தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.  இந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் எனப்படும் மிகை ஊதியமோ, முன்பணமோ வழங்கப்படாது என்பதால், மிகக்குறைந்த ஊதியத்தைக் கொண்டு தான் தீப ஒளித் திருநாளை அவர்கள் கொண்டாட வேண்டும். ஆனால், அந்த மிகக்குறைந்த ஊதியத்தைக் கூட 4 மாதங்கள் வரை  வழங்காமல் இழுத்தடித்தால் அவர்களால் அன்றாட செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்,  தீப ஒளித் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்? அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும்,  அவர்கள் தீப ஒளித் திருநாளை  துயரமில்லாமல், மகிழ்ச்சியாகக் கொண்டாட வசதியாகவும்  அவர்களுக்கான  ஊதிய நிலுவையை  தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks