Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்

Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
News Image

Tasmac Update: மதுபாட்டிலை எந்த டாஸ்மாக் கடையிலும் கொடுத்த 10 ரூபாயை இனி திரும்பப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள்:

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் குடிமகன்களை கட்டாயப்படுத்தி வசூலிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய பிரச்னையாக வெடித்தன. தவெக ஆட்சி அமைந்தால் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் முழுமையாக ஒழிக்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பாட்டிலுக்கு 10 ரூபாய் போன்ற முறைகேடுகளை களைய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இதற்காக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, கடைகளுக்கான செலவுகளுக்கு அரசே நிதி ஒதுக்குவது, முன்பணம் வழங்குவது போன்ற சலுகைகளுடன், கூடுதலாக பணி வசூலிப்பவர்களை பணியிடை நீக்கம் செய்வது போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் தான் முறைகேடுகளை களைய மேலும் சில புதிய நடைமுறைகளை நவம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

நவ.1 முதல் டாஸ்மாக்கில் வரும் மாற்றங்கள்:

தமிழ்நாடு மதுபான விற்பனை கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கே.நந்தகுமார்  அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மிக முக்கியமான ஒருங்கிணைந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்கும் போது, பாட்டிலில் அச்சிட்ட விலைக்கு மேல் காலி பாட்டிலுக்காக தனியாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. காலி பாட்டிலை திருப்பி கொடுக்கும் போது அந்த 10 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய சட்டம் எண் 13/2026-ன் படி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி என்ற பெயரில் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், 1.11.2026 முதல் அந்த 10 ரூபாய் பாட்டிலின் அச்சிட்ட விலைக்குள்ளேயே சேர்க்கப்பட்டு விடும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?

கூடுதல் 10 ரூபாய் இனி கிடையாது..!

இதனால் பாட்டில் இனி  அதில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே விற்பனை செய்யபடும். அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வசூலிக்க கூடாது. அப்படி வசூலித்தால் அது அங்கீகரிக்கப்படாத வசூலாக கருதப்பட்டு, கடை பணியாளர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி பாட்டிக்கு 10 ரூபாய் கிடைக்குமா?

கூடுதலாக 10 ரூபாய் என்பது இனி தனியாக வசூலித்த பணமாக இருக்காது. அச்சிட்ட விலைக்குள் இருக்கும் வரி பணத்தில் இருந்து, அதிலிருந்தே திருப்பி கொடுக்கப்படும் பாட்டிலுக்கான 10 ரூபாய் வழங்கப்படும். நீங்கள் எந்த கடையில் மது வாங்கி இருந்தாலும், எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் பாட்டிலை திருப்பி கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். கியூஆர் கோடு ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகே பணம் கொடுக்கப்படும்.

கியூஆர் கோடு ஸ்கேன் கட்டாயம்!

ஒவ்வொரு பாட்டிலிலும் இனி 2 கியூஆர் கோடுகள் இருக்கும். அதன்படி,

1. கலால் வரி கியூஆர் கோடு - பில் போடுவதற்கு
2.  பை-பேக் கியூஆர் கோடு - பாட்டிலை அடையாளம் காண

பாட்டில் விற்கும் போதும் ஸ்கேன் செய்ய வேண்டும், காலி பாட்டிலை வாங்கும் போதும் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யாமல் பணம் கொடுக்க கூடாது. கிடங்குகளில் உள்ள வெளிநாட்டு மது பாட்டில்கள், மற்ற மாநில மது பாட்டில்களுக்கு இன்னும் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டவில்லை. அவற்றுக்கு 31.10.2026-க்குள் கட்டாயம் ஸ்டிக்கர் ஒட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடைகளுக்கு கூடுதல் சம்பளம்..!

காலி பாட்டில்களை வாங்கி, ஸ்கேன் செய்து, எண்ணி, வைத்து, ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்க கூடுதல் வேலை செய்வதால், கடைகளுக்கு காலி பாட்டில்களை கையாளும் கட்டணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 பாட்டிலுக்கு கீழ் விற்கும் கடைக்கும், 2,000-க்கு மேல் விற்கும் கடைக்கும் தனி தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி - ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் / 2,000 ரூபாய்

மற்ற மாநகராட்சி பகுதிகள் - 900 ரூபாய் / 1,800 ரூபாய்

நகராட்சி மற்றும் பேரூராட்சி - 800 ரூபாய் / 1,600 ரூபாய்

ஊராட்சி பகுதிகள் - 750 ரூபாய் / 1,500 ரூபாய்

இந்த பணம் கடை மேற்பார்வையாளரின் வங்கி கணக்குக்கு மாதம் தோறும் முன்பணமாக கொடுக்கப்படும்.

முக்கிய உத்தரவுகள்:

ஒவ்வொரு கடையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் "மது பாட்டில்கள் அச்சிட்ட விலைக்கு மட்டுமே விற்கப்படும், கூடுதல் வசூல் இல்லை, காலி பாட்டிக்கு 10 ரூபாய் உண்டு" என்ற அறிவிப்பை 31.10.2026-க்குள் வைக்க வேண்டும்

அனைத்து பணியாளர்களுக்கும் 31.10.2026-க்குள் பயிற்சி முடிக்க வேண்டும்

இந்த உத்தரவு 1.11.2026 முதல் கட்டாயம் அமலுக்கு வருகிறது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks