Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 16 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

உடுமலைப்பேட்டை

உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டிணம்.

வேலூர் மாவட்டம்

நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ துரை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள், சேந்தமங்கலம், அசநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள், அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்

அல்லிநகரம், தொழில்துறை, பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லரிக்காய், புதுகுடிசைவூர்க்காய்.

தஞ்சாவூர் மாவட்டம்

ஈச்சன்கோட்டை, துறையூர் முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

திருச்சி மாவட்டம்

குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்த நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பாரி நகர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா நகர் எக்ஸ்டன்சன்.

புதுக்கோட்டை மாவட்டம்

நாகுடி முழு பகுதி, கொடிகுளம் முழு பகுதி, ஆவுடையார்கோயில் முழு பகுதி, அமரடாக்கி முழு பகுதி, வல்லவரி முழு பகுதி.

கடலூர் மாவட்டம்

செப்ளாநத்தம், கோட்டகம், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், கீழக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்ப்பணம்பட்டு, மேல்பதி, அடூரகரம், ஆண்டிக்குப்பம், வெங்கட குப்பம், நெத்தனாங்குப்பம், கருங்குழி, கொளக்குடி குப்பம், குள்ளன்னார்குப்பம், பெரியகட்டுசாகை, அணுக்கம்பட்டு, கருமாச்சிபாளையம், வெங்கட்டமாள்புரம், அகரம், அகரம் காலனி, ராமாபுரம், எஸ்.புதூர், ராமாபுரம், எஸ்.புதூர், புதுக்குப்பம், வள்ளுவர்காலனி, கங்கநாதன்குப்பம், மெட்டிவெளி, காட்டு ரெங்கநாதபுரம், ஆர்.என்.கொண்டான்பட்டு, ஏ.என்.கொண்டான்கூடம். திம்மராவுத்தங்குப்பம், டி.பாளையம், தோப்புக்கொல்லை, அகரம், நீரழி, ராமநாதங்குப்பம், வெங்கடம்மாள்புரம், பி.என்.குப்பம், தம்பிப்பேட்டை திரட்டிக்குப்பம், சம்மட்டிக்குப்பம், புலியூர், அம்பலவாணன்பேட்டை.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article