அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டுக்கு இடையில் ஓய்வு பெற்றாலும் ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் இறுதி வரை மறுபணி நியமன அடிப்படையில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கு ஓய்வுக்குப் பின் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போல் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.

20% ஊதியம் பிடித்தம்

CPS திட்டத்தில் மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமன பணி காலத்தில் 20% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு 80 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. இதை கருவூல கணக்குத் துறைக்கும், நிதி துறையில் கவனத்திற்கும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் கருவூலக் கணக்குத்துறை ஆணையர் நிதித்துறையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார். தற்போது மறுபணி நியமன காலத்தில் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம் முழுவதையும் பெற்று வழங்கலாம் என்று நிதித்துறை சார்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?

20% CPS பிடித்தம் ரத்து

மறுபணி நியமனக் காலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு உள்ளிட்ட 20% CPS தொகையைப் பிடித்தம் செய்யத் தேவையில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம்

மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி ‘ஒப்பந்த அடிப்படையிலான கணக்குத் தலைப்பின்’ (Contract Basis Head of Account) கீழ் பெற்று வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பி தரப்படும்

ஏற்கனவே மறுபணியில் உள்ள ஆசிரியர்களிடம் ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் ஊதியம் பெற்ற கணக்கு தலைப்பின் கீழ் அந்த வித்தியாசத் தொகை மீண்டும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

தற்காலிக தளர்வு

ஒப்பந்த ஊதியத் தலைப்பில் நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களின் ஊதியத்தை 30.09.2026 வரை வழக்கமான ஊதியத் தலைப்பின் கீழேயே பெற்று வழங்க கருவூலங்களுக்குத் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article