கருங்கடலில் இன்று பொதுமக்கள் பயணித்த கப்பல் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில், அதன் கேப்டன் கொல்லப்பட்டார் என்றும், கப்பலில் இந்திய மற்றும் அஜர்பைஜான் குடிமக்களும் இருந்தனர் என்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சோளத்தை ஏற்றிச் சென்ற அந்த கப்பல், துருக்கிக்குச் சொந்தமானது. 11 மாலுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் காயமடைந்தார். இதனிடையே, தாக்குதல்களை கண்டித்த ஜெலென்ஸ்கி, கேப்டனின் மரணத்தை உறுதிப்படுத்தினார். மேலும், மற்றொரு நபரின் நிலை இன்னும் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“துருக்கிக்குச் சொந்தமானதும், மக்காச்சோளத்தை ஏற்றிச் சென்றதுமான ஒரு பயணிகள் கப்பல் மீது, நடுநிலையான கடல் பகுதியில் இரண்டு ரஷ்ய ஆளில்லா விமானங்கள் நடத்திய கோரமான தாக்குதல். அதில் அஜர்பைஜான் மற்றும் இந்தியக் குடிமக்கள் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி, துரதிர்ஷ்டவசமாக, கப்பலின் கேப்டன் உயிரிழந்துவிட்டார் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. எனது ஆழ்ந்த இரங்கல்கள். மற்றொரு நபரின் நிலை இன்னும் கண்டறியப்பட்டு வருகிறது. பதினொரு கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் காயமடைந்தார்,” என்று ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

A horrific strike by two Russian drones on a civilian vessel in neutral waters carrying corn and owned by Türkiye. Azerbaijani and Indian citizens were on board. As of now, unfortunately, we know that the ship’s captain was killed. My condolences. The fate of one other person is still being established. Eleven crew members were rescued, one of them injured. Ukraine has repeatedly proposed concrete steps to de-escalate the situation and ensure security in the Black Sea. There have also been relevant proposals from third countries. But Russia consistently chooses terror and sinking civilian vessels instead of normal maritime navigation. Pressure is needed to restore global food security. And everyone who is genuinely interested in this must help.

— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) October 5, 2026

பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா குறிவைப்பதாக குற்றம்சாட்டும் ஜெலென்ஸ்கி

நிலைமையை தணிப்பதற்கும், கருங்கடலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உக்ரைன் பலமுறை உறுதியான நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாகவும், அதே நேரத்தில், மூன்றாம் நாடுகளும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

"ஆனால் ரஷ்யா, இயல்பான கடல்வழிப் போக்குவரத்திற்கு பதிலாக, தொடர்ந்து பயங்கரவாதத்தையும், பொதுமக்கள் கப்பல்களை மூழ்கடிப்பதையும் தேர்ந்தெடுக்கிறது. உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மீட்டெடுக்க அழுத்தம் தேவை. மேலும், இதில் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் உதவ வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைனில் இந்தியருக்கு சொந்தமான மருந்துக் கிடங்கு தாக்கப்பட்டது

முன்னதாக, நேற்று, உக்ரைனின் சுமி பகுதியில், இந்தியருக்கு சொந்தமான மருந்து கிடங்கு ஒன்று ரஷ்ய ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டது.

மருத்துவ பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கின் மீதான தாக்குதலில் 52 வயதான ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஜெலென்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும், டினிப்ரோவில் உள்ள ஒரு தகவல் தொடர்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகமும் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், ரஷ்யாவை “மிருகத்தனமானது” என்று கூறியதோடு, “அந்த தொழிற்சாலை இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமானது” என்பதையும், அது “மிகவும் தேவைப்படும் மருந்துகளை” உற்பத்தி செய்து கொண்டிருந்தது என்பதையும் ரஷ்யா பொருட்படுத்தவில்லை என்றும் கூறியது. மேலும், ரஷ்யாவை “முரண்பட்ட நாடு” என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவுடனான தனது “வரலாற்று” நட்பைப் பற்றி அது கவலைப்படவில்லை என்றும் கூறியது.

Source: Read Full Article