NTK Karthika: வரலாற்று சிறப்புமிக்க போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்ட கோவை சிறையில் தனக்கும் இடம் அளித்ததற்கு, முதலமைச்சருக்கு நன்றி என கார்த்திகா பேசியுள்ளார்.

ஜாமினில் வெளியே வந்த கார்த்திகா.!

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜயின் தேர்தல் பரப்புரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கணவர் உட்பட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜாமின் பெற்று இன்று காலை வெளியே வந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு கார்த்திகாவிற்கு மாலை அணிவித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி..!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் போன்ற பெருந்தலைவர்கள் இருந்த கோவை சிறையில், பொய் மற்றும் ஆதாரமற்ற குற்றங்களை சுமத்தி இந்த சிறையில் தள்ளிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தற்குறி விஜய்க்கு நன்றிகள். இத்தகைய வரலாற்று பெருமைமிக்க சிறைச்சாலையில் நாங்களும் இருந்தோம் என்பது வாழ்நாள் பெருமை” என கார்த்திகா பேசினார்.

முதலமைச்சரை தற்குறி என விமர்சிக்கலாமா?

முதலமைச்சரின் வாகன அணிவகுப்பை தடுத்தது குறித்து தானே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, “எங்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாராபுரம் இடைத்தேர்தலுக்கான இறுதிநாள் பரப்புரையில் முதலமைச்சர் விஜய் மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பரப்புரை செய்யக்கூடாது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது இல்லையா?” என பதிலளித்தார். உடனே முதலமைச்சரை தற்குறி என பேசலாமா? என்ற கேள்வி எழுப்புகையில், “ஜனநாயக கடமை ஒவ்வொரு வேட்பாளருக்கும் இருக்கிறதா? இல்லையா? வாக்கு கேட்கும் எங்கள் உரிமையை அவர்கள் எப்படி மறுக்கலாம்? இது ஜனநாயக மீறல் இல்லையா? அவர்களை வேறு எப்படி சொல்ல முடியும்” என கார்த்திகா பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! ரூ.12 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கி அரசு அதிரடி உத்தரவு

கைது செய்யுங்கள் என சவால்விட்டீர்களே?

பரப்புரையின் போது கைது செய்து பாருங்கள் என சவாலிவிட்டீர்கள் இப்போது, கைது செய்துவிட்டார்களே என வினவும்போது, “எனக்கு என்ன இருக்கு நான் ஒன்று ஊழல் குற்றவாளி கிடையாது. ஆளுங்கட்சிக்காரர்களை பொன்று போதைப்பொருள் உற்பத்தி செய்து கைதாகவில்லை. நான் மக்களுக்காக தொடர்ச்சியாக போராட்ட களத்தில் இருக்கிறேன். கைது செய்து காட்டுங்கள் என நான் சொல்லவில்லை. நாங்கள் போராளிகள் எப்போது மக்களுடன் களத்தில் நிற்கிறோம்” என நாதக வேட்பாளர் பதிலளித்துள்ளார்.

”ஈனப்பிறவி” என விமர்சித்தேனா?

முதலமைச்சரை ஈனப்பிறவி என்றெல்லாம் பேசியிருக்கிறீர்களே, அதற்கான வீடியோவும் இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்கையில், “நான் எப்போது அப்படி பேசினேன். நான் எங்கு? எப்போது? எப்படி பேசினேன். அவர் ஜனநாயக மீறலா? இல்லையா? என்பதை யாருமே பதில் சொல்ல மறுக்கிறீர்களே” என காத்திகா ஆவேசமடைந்தார். அதேநேரம் அருகில் இருந்த அவரது கணவர், “இப்போது நாங்கள் சிறையில் இருந்து வந்து இருக்கிறோம். அதை பற்றி மட்டும் கேளுங்கள்” என வலியுறுத்தினார்.

Source: Read Full Article