காலாண்டு தேர்வு ரிசல்ட் ; சென்னை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு ஷாக் நோட்டீஸ் !! பின்னணி என்ன ?

காலாண்டு தேர்வு ரிசல்ட் ; சென்னை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு ஷாக் நோட்டீஸ் !! பின்னணி என்ன ?
News Image

"காலாண்டு தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு"

சென்னை மாநகராட்சியின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள் , 130 நடுநிலைப் பள்ளிகள் , 46 உயர்நிலை பள்ளிகள், 35 மேல்நிலை பள்ளிகள் என, மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு லட்சத்து , 11 ஆயிரத்து , 567 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.

மேலும் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் , சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பின் தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

"100 - க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்"

இதனால் , பொதுத் தேர்வு எழுதும் , 10 - ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - வில், 75 சதவீத தேர்ச்சியை பதிவு செய்யாத ஆசிரியர்களுக்கு , சென்னை மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக , பெரம்பூர் எம்.எச்., சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் , கொளத்துாரில் ஐந்து ஆசிரியர்கள் உட்பட பல பள்ளிகளை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், தேர்ச்சி சதவீதம் குறைவிற்கான காரணம் , மாணவர்கள் தேர்வு நாளில் விடுமுறை எடுத்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

"ஆசிரியர்கள் மன உளைச்சல்"

தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் , சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , தாங்கள் பயிற்றுவிக்கும் பாடங்களில் , காலாண்டு தேர்வில் 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது நம் கல்வித் துறையில் இதுவரையில் இல்லாத நடைமுறை. இதனால் , ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வி அலுவலர் வசந்தியின் செயல்பாடுகளால் , பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. அவருக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks