ஒரே குடும்பத்தை குறிவைத்து தாக்குதல்? பெண் கொலை; இரு மகள்கள் கடத்தல் - அன்புமணி கண்டனம்

ஒரே குடும்பத்தை குறிவைத்து தாக்குதல்? பெண் கொலை; இரு மகள்கள் கடத்தல் - அன்புமணி கண்டனம்
News Image

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே முதலூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் படுகாயமடைந்தனர். மேலும், இரு மகள்களைக் கடத்திச் சென்ற கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கடத்தப்பட்ட இரு சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில்  ஆயுதங்களுடன் புகுந்த  கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில்  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்  நடத்துகிறது என்றால் அதை  காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும். இந்தத்  கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான  முன்பகை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும். அந்தக் கடமையை காவல்துறை செய்யவில்லை.

ஒரே குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு, இருவரை அரிவாளால் வெட்டிய கும்பல், இரு பெண் குழந்தைகளையும் கடத்திக் கொண்டு சென்ற கும்பலிடமிருந்து  குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கும் போதிலும், கொலையாளிகளை  காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் ஓர் அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. சாத்தான்குளம் முதலூரில்  நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு காரணமான கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks