Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!

Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
News Image

இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்திய அணியில் பெரியளவு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.

மீண்டும் திரும்பிய நடராஜன்:

டெல்லி அணிக்காக இவர் கடந்த சீசனில் ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு திரும்பியுள்ளார். இதை சன்ரைசர்ஸ் அணி மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது. இதையடுத்து, நடராஜனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ட்ரேடிங் முறையில் நடராஜன் டெல்லி அணியில் இருந்து ஐதரபாத் அணிக்கு மாறியுள்ளார். அவருக்கு பதிலாக ஐதரபாத் அணியில் இருந்த ஜீசன் அன்சாரி டெல்லிக்கு சென்றுள்ளார்.

சன்ரைசர்ஸின் ரைசிங் ஸ்டார்:

டெல்லி அணிக்கு நடராஜனை ரூபாய் 10.75 கோடிக்கு கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. அவர் அந்த அணிக்காக இரண்டு சீசன்களில் 12 போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெல்லி அணிக்காக நடராஜன் பெரியளவில் சோபிக்காவிட்டாலும், சன்ரைசர்ஸ் அணிக்காக மிகப்பெரிய அளவில் சிறப்பாக ஆடினார். 2020ம் ஆண்டு முதல் 24ம் ஆண்டு வரை ஐதரபாத் அணிக்காக ஆடிய அவர் மிகவும் பிரதான பந்துவீச்சாளராக திகழ்ந்தார். குறிப்பாக, 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Orange Army, our Nattu is coming home 😍🧡 https://t.co/686K713QUf
— SunRisers Hyderabad (@SunRisers) October 14, 2026

35 வயதான நடராஜன் இதுவரை 73 போட்டிகளில் ஆடி 72  விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக ரூபாய் 5 கோடிக்கு திரும்பியுள்ளார். அன்சாரி ரூபாய் 40 லட்சத்திற்கு டெல்லிக்குச் சென்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பஞ்சாப் அணிக்காக 2017ம் ஆண்டு அறிமுகமான நடராஜன் அடுத்தாண்டே சன்ரைசர்ஸ் அணிக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு தேர்வானார். 2022ம் ஆண்டு அவரை ரூபாய் 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் தக்கவைத்தது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஆடாவிட்டாலும் அவரை சன்ரைசர்ஸ் அணி தற்போது மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

வலுவாகும் சன்ரைசர்ஸ்?

கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக ஆடி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு சீசன் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கடந்த சீசனில் வெற்றி, தோல்வி என கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அடுத்து வரும் சீசனில் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சன்ரைசர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

35 வயதான நடராஜன் இந்திய அணிக்காக 1 டெஸ்ட் போட்டியில் டி 3 விக்கெட்டுகளையும், 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 4 டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks