MK Stalin: தவெக வேட்பாளர் உருவக்கேலி.. கருணாநிதி காலம் முதல் இதே வேலை.. ஸ்டாலினை சாடிய தவெக!

MK Stalin: தவெக வேட்பாளர் உருவக்கேலி.. கருணாநிதி காலம் முதல் இதே வேலை.. ஸ்டாலினை சாடிய தவெக!
News Image

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. தவெக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை

வரும் அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை (அக்டோபர் 4) மாலையுடன் இரு தொகுதிகளுக்கான பரப்புரை ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார். காலையில் ரோடு ஷோ சென்ற அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தவெக அரசை சரமாரியாக சாடினார்.

அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் சில வார்த்தைகளை விட்டார். அவர் அதிமுகவில் இருந்து தவெக கட்சிக்கு வந்ததை குறிப்பிட்டு அவர் பெட்டி பாமா, பல்டி பாமா என அழைக்கப்படுவதாக சொன்னார். அதோடு மட்டுமல்லாமல் இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படித்தான் பல்டி அடித்தாரோ என தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிகப்பெரிய ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் இப்படி உருவக்கேலி செய்யலாமா என கடும் கண்டனம் எழுந்தது.

கருணாநிதி காலத்தில் இருந்து இதே வேலை

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததிலிருந்து உறுதியாகிறது.பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு  மாண்பா?

பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செய்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது. ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தவெக அமைச்சர்கள், பிற கட்சி தலைவர்கள், இணையவாசிகள் என பலரும் ஸ்டாலின் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks