MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் பரப்புரை:

இந்த தொகுதியில் ஆளுங்கட்சியான தவெக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சியான திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக சார்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தாராபுரத்தில் இன்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையில் அவர் பேசும்போது, ஆளுங்கட்சியான தவெக வேட்பாளர் பற்றி விமர்சித்துப் பேசினார். அப்போது, அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக… pic.twitter.com/iV1UACy7DN
— Arunraaj TVK (@arunraajkg) October 2, 2026

உருவ கேலி:

மு.க.ஸ்டாலின் தாராபுரத்தில் பேசும்போது, மக்களாகிய நீங்களே இப்போது என்ன சொல்லிக் கூப்பிட்றீங்க? பெட்டி பாமா. இன்னொன்னும் இருக்கு பல்டி பாமா. எப்படிதான் அந்த உருவத்தை வச்சு பல்டி அடிச்சாங்களோ தெரியல?

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்:

ஒரு முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு உருவக்கேலி செய்யும் விதமாக பேசலாமா? என்று பல தரப்பினரும் அவருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் பேசிய வீடியோவை பதிவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிவிட்டுள்ளதாவது,

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி சத்தியபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார்.  இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தோல்வி பயம்:

முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு  தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்  நிலையில்...  அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.

அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இதுதான் திமுக-வின் டீன். தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்:

ஆளுங்கட்சியான தவெக-வைத் தோற்கடித்தே தீர வேண்டும் என்று திமுக மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தில் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், மு.க.ஸ்டாலினும் தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை வரும் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியிருப்பதால் இந்த தேர்தல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  இடைத்தேர்தலின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே தமிழ்நாட்டில் அடுத்த கட்ட அரசியல் களம் நகரும் என்றே கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks