மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் வைத்து கத்தியால் குத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி மீது தாக்குதல்
2026 மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெறவில்லை. முதலமைச்சராக இருந்த அவர் தோற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் திரிணாமூல் காங்கிரஸ் 00 இடங்களுக்கும் குறைவான இடங்களையே வென்ற நிலையில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மமதா தோல்வியடைந்தார். இந்த படுதோல்வியால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள இவை அனைத்தும் அக்கட்சியின் சதி என மமதா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தோற்ற நிலையில் மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கடந்த மே மாதம் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த சென்றபோது கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். தற்போது மமதா மீதே தாக்குதல் நடைபெற உள்ள சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கத்தியால் குத்த வந்த பெண்
கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லத்திற்கு தினமும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வருகை தருவது வழக்கம். அப்படியாக அனுசுவா சாஹா என்ற பெண் நேற்று வந்த நிலையில் அத்துமீறி மமதா வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் தாக்க முயன்றார். பாதுகாவலர்கள் கேட்டதற்கு தான் மமதாவின் மருமகள் என சொல்லிக் கொண்ட அந்த பெண் அத்தை என கத்திக் கொண்டே மமதாவை நோக்கி வந்துள்ளார். இந்த சம்பவம் மாலை 6 மணிக்கு நடைபெற்றுள்ளது. மமதா அருகில் வந்த சாஹா, அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் தாக்க முயன்றுள்ளார்.
ஆனால் உடனடியாக சுதாரித்த அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அப்பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தா காவல்துறையால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் குடிமைத் தொண்டர்கள் என்பவர்கள் தான் பாதுகாப்பு பணியில் மமதா வீட்டில் இருந்துள்ளனர். இசட்-பிளஸ் பாதுகாப்புப் பெற்ற ஒருவரின் இல்லத்தை ஒருவர் எப்படி இவ்வளவு எளிதாக அணுக முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் பிடிபட்ட இளம்பெண் சஹா போதைக்கு அடிமையானவர் எனவும் சொல்லப்படுகிறது. இதன்பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கலாம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவின் ஷ்யாம்பஜார் பகுதியில் தனது கார் மீது ஒரு பெரிய கல் வீசப்பட்டதாகவும், அதனால் பல நாட்கள் நெஞ்சு வலி நீடித்ததாகவும் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Read Full Article