EV Velu: சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. சுதாரித்து கொண்டு முந்திய திமுக முன்னாள் அமைச்சர்!

EV Velu: சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. சுதாரித்து கொண்டு முந்திய திமுக முன்னாள் அமைச்சர்!
News Image

திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான திடலை சமன் செய்வதற்காக அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் எஃப்.ஐ.ஆர் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரி இருவர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு அக்டோபர் 7-ம் தேதி விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!

உயர்நீதிமன்றத்தில் மனு

இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் முன்ஜாமீன் கோரிய மனுக்களுக்கு  லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks