Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்

Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
News Image

Chennai Water Crisis Ring Main System: சென்னை குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என கூறப்படும் ரிங் மெயின் சிஸ்டம் திட்டம் சுமார் 3 ஆயிரத்து 108 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு:

வேகமாக வளர்ந்து வரும் சென்னை பெருநகரில் போக்குவரத்து மட்டுமின்றி சீரான குடிநீர் விநியோகம் என்பதும் மிக முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக நீடித்து வருகிறது. அந்த வகையில் தான் நகரின் முக்கிய நீராதாரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ரிங் மெயின் சிஸ்டம் எனும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் முன்னெடுக்கபட்டு, அதற்கான ஆரம்பகட்ட அனுமதியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை அத்தனையும் தயாரான நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணியளவில் சோழிங்கநல்லூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

சென்னைக்கான நீராதாரங்கள்:

தற்போதைய சூழலில் சென்னைக்கான குடிநீர் விநியோகமானது மேற்பரப்பு நீர் நிலைகள்,  நிலத்தடி நீர் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை சார்ந்துள்ளது. மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள ஐந்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட எட்டு அமைப்புகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர், பிரதான குழாய்கள் மூலம் பல்வேறு நீர் விநியோக நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி, பேரூரில் 400 MLD கொள்ளளவு கொண்ட நான்காவது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கான நீர் விநியோகத்தில் சிக்கல்:

இந்த நீர் விநியோக அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுகின்றன. அதனால் ஏதேனும் ஒரு நீராதாரத்தில் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டாலும், மற்றொரு நீராதாரத்தில் உள்ள நீரை கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவ முடியாத சூழல் நிலவுகிறது. உதாரணமாக சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேரடி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஒருவேளை பூண்டி ஏரி தொடர்புடைய வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் குழாய் உடைந்தாலும், அதுசார்ந்த ஒட்டுமொத்த பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருந்தாலும், அதை கொண்டு பூண்டி ஏரியை சார்ந்துள்ள மக்களுக்கான தண்ணீரை விநியோகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்: DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு

நீராதாரங்களை ஒருங்கிணைக்கும் ரிங் மெயின் சிஸ்டம்:

மேற்குறிப்பிடப்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தான், ரிங் மெயின் சிஸ்டம் எனும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் நீரேற்று நிலையங்கள், ஃபீடிங் குழாய்கள், வளையக் குழாய்கள் மற்றும் கடத்துக் குழாய்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மூடிய-சுற்று வலையமைப்பின் மூலம், வரவிருக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சென்னைக்கான ஒன்பது நீர் ஆதாரங்களும் ஒருங்கிணைக்கப்படும். இதானால் ஏதேனும் ஒரு நீராதாரத்தில் பிரச்னை அல்லது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது கூட, ஒட்டுமொத்தக் கிடைப்பளவின் அடிப்படையில் அனைத்து நீர் விநியோக மையங்களுக்கும் குடிநீரைச் சமமாக விநியோகிக்க முடியும். அதன் மூலம் சென்னை மட்டுமின்றி ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளை சேர்ந்த சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக கையாளுதல்:

அழுத்தம் மற்றும் நீரின் தர சென்சார்கள், அத்துடன் நீரோட்டத்தை சீராக்கும் மற்றும் அழுத்தக் குறைப்பு வால்வுகள் உள்ளிட்ட மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி இந்த அமைப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இது ஒரு நிரல்படுத்தக்கூடிய (Programmable) laajik கட்டுப்பாட்டு (PLC) அமைப்பு மூலம் இயக்கப்படும். ஒட்டுமொத்த மேற்பார்வையானது, CMWSSB தலைமை அலுவலகத்தில் உள்ள SCADA அடிப்படையிலான முதன்மைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மேற்கொள்ளப்படும். தற்போது, ​​CMWSSB ஆனது 84 நீர் விநியோக நிலையங்கள் மூலம் 85.7 லட்சம் மக்கள்தொகைக்கு தினசரி சுமார் 1,200 MLD தண்ணீரை வழங்குகிறது. புதிய ரிங் மெயின் சிஸ்டமானது அனைத்து 84 நீர் விநியோக நிலையங்களுக்கும் தண்ணீரை விநியோகிக்கும் வகையிலும், 2057-ஆம் ஆண்டிற்குள் கணிக்கப்பட்டுள்ள 1,762 MLD தேவையைக் கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.3,108 கோடி பட்ஜெட்:

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் பட்ஜெட் சுமார் 3 ஆயிரத்து 108 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பெருநகரை எல்லையை ஒட்டி சுமார் 98 கிலோ மீட்டர் நீளத்திற்கு பூமிக்கு அடியில் குழாய்கள் பொருத்தப்பட உள்ளன. அதன் வாயிலாக சோழிங்கநல்லுார், ஜல்லடையான் பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆலந்துார், நந்தம்பாக்கம், போரூர், அம்பத்துார், கள்ளிக்குப்பம், சூரப்பட்டு, புழல், மாதவரம், திருவொற்றியூர், மணலி, பெத்தேல் நகர், வியாசர்பாடி, கண்ணப்பர் திடல், கீழ்ப்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அடையாறு, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகள் குழாய்களால் இணைக்கப்பட உள்ளன. திட்டப்பணிகள் பூர்த்தியடைய இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks