Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
News Image

கடந்த திமுக ஆட்சியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பின்பற்றும் மற்ற மாநிலங்கள்

இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல்வேறு மாநிலங்களும் தமிழக அரசை பின்பற்றியது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வவராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000யிலிருந்து ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி ஜூன் மாதத்தில் ரூ.1000லிருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வரை ரூ.1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!

பல்வேறு குளறுபடிகள்

அதுமட்டுமல்லாமல் புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு வாங்கியவர்கள், ஏற்கனவே தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டவர் புதிதாக விண்ணப்பிக்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது செயல்பாட்டில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகையில் முக்கிய மாற்றம்?

சரியான பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 செல்வதை உறுதி செய்யும், தகுதியற்ற பயனாளிகளை இத்திட்டத்தில் இருந்து நீக்கிய பிறகு ரூ.2500 வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது உள்ளாட்சி தேர்தல் முன்பாக ரூ.2500 மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks