பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக (DLFP) பணிபுரிய விருப்பமுள்ள நபர்களிடமிருந்து இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவை

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. அந்தவகையில், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கென, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்.

தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாகவோ இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் குறிப்பிடும் மாவட்டங்கள், நிறுவனம், நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டமாகவோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாகவோ இருத்தல் வேண்டும். -2- அவ்வாறாக, தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், OFC பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும். மேலும், விண்ணப்ப பதிவானது TANFINET இணையதள போர்டலின் https://tanfinet.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக நடைபெறும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ (Division) தேர்வு செய்திடல் வேண்டும். விண்ணப்பதாரர் ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25,000- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.2,00,000-பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திட வேண்டும். அதனைத்தொடர்ந்து, சென்னை TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும். மேலும், https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 02.11.2026 அன்று மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article