மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பழமையான எச்சங்களை கொண்ட ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல் பாட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு. அரசு மது கடைகளை பாதுகாக்க காட்டும் அக்கறையை பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை - நீதிபதிகள் வேதனை.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்

நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பெத்தணன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு...," நான் இந்திய ராணுவத்தின் முன்னாள் படைவீரர் பேரையூர் தாலுகா எஸ்.பாப்பிநாயக் கன்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களுக்கு அருகில், சலுப்பென் கரடு, ஓணான் கரடு மற்றும் பெருமாள் மலை ஆகிய அமைந்துள்ளது. இதில் ஓணான் கரடு எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்று உள்ளது. இந்த மலை பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்களையும், புதைக்கும் முறைகளையும் சுட்டிக்காட்டும் பல தொல் பொருள், வரலாற்று, பண்பாட்டு எச்சங்களை கொண்டது இப்பகுதி குறிப்பிடத்தக்கது எனவே இயற்கை முக்கியத்துவம் வாய்ந்து இருக்கிறது. இந்த மலை இயற்கையான நீர்ப்பிடிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளது. மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.

ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது

இப்பகுதியில் பழங்கால கட்டுமானங்கள், கல் எச்சங்கள், பழங்கால உருக்கு உலை, முதுமக்கள் தாழிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், குறியீடு கள் மற்றும் பிற தொல்லியல் பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு பழங்கால எச்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவை சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த மலையில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டால் பழமையான எச்சங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதும், பல்லுயிர் வளத்தை கொண்டுஇருக்கும். ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.

அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள்.. அரசு மது கடைகளை பாதுகாக்க காட்டும் அக்கறையை பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகள் பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் திரும்ப கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Source: Read Full Article