தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் மீது கட்சியின் மாநில ஓபிசி பிரிவு செயலாளரான திவ்யா சேஷாத்ரி அண்மையில் பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து என்னுடன் அவர் உறவுகொண்டதில் நான் கர்ப்பமடைந்தேன்.

கருப்பு முருகானந்தம்

ஆனால், வலுக்கட்டாயமாக அதைக் கலைக்கச் செய்ததோடு, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்னைத் துன்புறுத்தினார். என் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்தார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு இருவரையும் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதனை கருப்பு முருகானந்தம் திட்டவட்டமாக மறுத்தார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?

முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்

இந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில் பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், பெங்களூரைச் சேர்ந்த திவ்யா சேஷாத்ரி என்பவர் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும், அந்த பெண்ணும் மிக நெருக்கமாக இருந்ததாகவும், அவரை இழிவுப்படுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டுகள் பொய்யானது

அந்த மனுவின் அடிப்படையில் என் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. தனது கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என வேறொரு நண்பரும் மூலமாக அறிமுகமான அவருக்கு பல்வேறு உதவிகளை நான் செய்துள்ளேன்.

நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயார்

இந்நிலையில், என் மீது பொய்யான புகாரை அந்த பெண் அளித்துள்ளார். நான் சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்பில் உள்ளேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படுவேன் என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Source: Read Full Article