ஆசிய விளையாட்டு : ஆடவர் கால்பந்து இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி தென் கொரியா அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

மோசமான உலகக் கோப்பை

ஜூன் மாதம் நடைபெற்ற 22-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தென் கொரியா அணிக்கு மிகவும் மோசமான ஒரு தொடராகவே அமைந்தது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அந்த அணி தென் ஆப்பிரிக்காவிடம் பெற்ற தோல்வியின் காரணமாக லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. இந்த மோசமான செயல்பாடுகள் காரணமாக தென் கொரியா அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியடைந்ததோடு, பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்தார்.

சர்ச்சைகளை சந்தித்த தென் கொரிய அணி

உலகக் கோப்பை தொடரில் அடைந்த படுதோல்வி காரணமாக தென் கொரியா அணியும் அதன் பயிற்சியாளரான ஹாங் மியுங்-போ-வும் மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதையடுத்து அவர் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அவர் சர்வதேச பெண் நடுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. இதன் காரணமாக, தென்கொரியா கால்பந்து ஃபெடரேஷனின் தலைமை அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனையும் மேற்கொண்டானர். தொடர்ந்து, பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ மீதான குற்றச்சாட்டுகளுக்கு தென்கொரியா கால்பந்து ஃபெடரேன் மன்னிப்பு கோரியது.

மகிழ்ச்சி தந்த தங்கப் பதக்கம்

இத்தகைய சூழல்களை கடந்து ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரில் தென் கொரியா அணி ஒரு புதிய உத்வேகத்துடன் களமிறங்கியது. தொடரின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. டோயோடா ஸ்டேயத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தொடரை நடத்தும் ஜப்பான் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஆசிய விளையாட்டில் தென் கொரியா கால்பந்து அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இதன்மூலம், உலகக் கோப்பைக்கு பிறகு துவண்டுக் கிடந்த ஒவ்வொரு தென் கொரியா கால்பந்து ரசிகர்கள் முகத்திலும் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.

ராணுவ சேவையில் இருந்து விலக்கு

தென் கொரியாவில் 18 வயதை கடந்த நல்ல உடல் தகுதிப் பெற்ற ஒவ்வொரு ஆணும் அந்நாட்டி ராணுவத்தில் கொஞ்சக் காலம் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஆசிய கோப்பைகளில் பதக்கங்கள் வென்றால் அந்த கட்டாய பணியமர்த்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதன்படி தென் கொரியா கால்பந்து அணி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ளதால் அந்த அணியில் இடம் பிடித்த அனைத்து வீரர்களுக்கும் கட்டாய ராணுவ சேவையில் இருந்து அந்நாட்டு அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

Source: Read Full Article