Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?

Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
News Image

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய கைதிகள் அனைவரும் 48 மணி நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டின் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவம் இதற்கு முன்பும் அரங்கேறியுள்ளது. அதில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி கீழே காணலாம்.

1. 43 கைதிகள் தப்பிய அதிர்ச்சி:

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக தமிழ்நாட்டில் இருந்த பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 72 பேர் வேலூரில் உள்ள திப்பு மகால் சிறப்புத் தடுப்பு சிறையிலும், மற்றவர்கள் ஹைதர் மஹாலிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் திப்பு மஹாலில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அங்கிருந்த தென்மேற்கு மூலையில் இருந்த கல்லைப் பெயர்த்தெடுத்து, மரக்கம்புகளை ஏணிபோல பயன்படுத்தி கீழ்தளத்திற்குச் சென்று அங்கிருந்த இரும்பு குழாய்கள், ஜன்னல் கம்பிகள், கரண்டிகள், அலுமினிய சாப்பாடு தட்டு ஆகியவற்றைக் கொண்டு 10 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். அந்த சுரங்கத்தை 158 நீளத்திற்கு சிறைக்கு வெளியே செல்லும் அகழி வரை தோண்டியுள்ளனர். பின்னர், அங்கிருந்து 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 43 கைதிகள் தப்பினர். இந்த சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

இந்த சம்படத்தில் தப்பியோடிய 21 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேர் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்ததனர். எஞ்சியவர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் என்று கூறப்படுகிறது.

2. மதுரையில் தப்பிய கைதிகள்:

1995ம் ஆண்டு மதுரை மத்திய சிறையில் தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் 9 பேர் தப்பிய சம்பவமும் அப்போது தமிழ்நாட்டில் அதிர்வலையை உண்டாக்கியது. போலி சாவிகளைத் தயாரித்து சிறையில் இருந்த போர்வை, இரும்பு கம்பிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறையின் உயரமான மதில் சுவரைத் தாண்டி அவர்கள் தப்பினர்.

3. ஆட்டோ சங்கர் தப்பிய சம்பவம்:

சென்னையை அதிரவைத்த பயங்கரமான கொலையாளி ஆட்டோ சங்கர். இவர் மீதான குற்றங்களுக்காக இவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆட்டோ சங்கர், அவரது தம்பி மோகன், ஆட்டோ சங்கர் மைத்துனர் எல்டின் உள்பட 5 பேர் சிறையில் இருந்து தப்பினர். சிறை ஊழியர்கள் உதவியால் அவர்கள் தப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ சங்கர் தப்பிய ஒரே மாதத்தில் கைது செய்யப்பட்டார்.

4. விடுதலைப்புலிகள்:

சென்னை மத்திய சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம் இரு முறை அரங்கேறியுள்ளது. தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் பாலன், பாலேந்திரன், பிரதாப், விக்கி உள்பட 9 பேர் 1995ம் ஆணடு பிப்ரவரி 27ம் தேதி தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறையில் இருந்த போர்வைகளை கயிறாக மாற்றி, சிறையில் இருந்த மதில்சுவரைத் தாண்டி அவர்கள் தப்பினர்.

தமிழ்நாட்டின் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய 4 பெரிய சம்பவங்களில் 3 சம்பவங்களில் விடுதலைப்புலிகளே தப்பியுள்ளனர். விடுதலைப் புலிகள் தப்பிய சம்பவம் 1995ம் ஆண்டே அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்த, சிறைக்கைதிகள் தப்பியதற்கு உதவிய அதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் தப்பிய வழக்கில் காவல்துறையினர் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks