மத்தியில் எந்த ஆட்சியாக இருந்தாலும் பதவி சுகம் இல்லாமல் திமுகவால் இருக்கவே முடியாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அமைச்சர் ஷாஜகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக கூட்டணி கட்சியினர் பரப்புரை

மதுராந்தகத்தில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநல வெற்றி கூட்டணி கட்சி தலைவர் நேற்று பரப்புரை மேற்கொண்டனர். இதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், வன்னி அரசு, ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார், மரிய வில்சன், காங்கிரஸ் எம்பி விஷ்ணு ரெட்டி, சுதா, விசிக எம்பி ரவிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

திமுகவை வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, “ஒரு அரசியல் இயக்கம் நடத்தக்கூடிய எதை கனவாக கண்டார்களோ, அதாவது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தவெக நிறைவேற்றிக் காட்டுள்ளது. விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். இப்படியான அருமையான ஆட்சியமைப்பை ஜோசப் விஜய் உருவாக்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதனை ஏற்காத திமுக சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வருடம் அக்கட்சியை பல்லக்கில் தூக்கி சுமந்த எங்களுக்கு இப்போது அதே பல்லக்கில் ஏறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அமைச்சராக நானும், வன்னி அரசும் பொறுப்பேற்றபோது திமுக முன்னணி தலைவரான ஆ.ராசா காழ்ப்புணர்ச்சியோடு, மிக தவறான வார்த்தைகளை பேசி விமர்சித்தார். இதுதான் விசிக, முஸ்லீம் லீக் தலைவர்களை கொந்தளிக்க வைத்தது. ஏன் இதுவரை கூட்டணியில் ஓட்டு வாங்கி விட்டு அணி மாறியது இல்லையா?..

1998ம் ஆண்டு மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைப் பெற்று விட்டு அன்று பாஜகவின் வாஜ்பாயை பிரமராக்கியது. ஒவ்வொரு முறையும் ஆட்சி வேண்டும், அதிகாரம் வேண்டும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறீர்கள். தேவகௌடா, வாஜ்பாய், ஐ.கே.குஜரால், மன்மோகன் சிங் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. இப்படி மாறி மாறி பதவி சுகத்தை அனுபவித்து விட்டு இன்று வரலாற்று வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை கொச்சைப்படுத்துவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். திமுகவில் ஒருவரை அணுகுவது எவ்வளவு கடினம். ஆனால் தவெகவில் அனைவரையும் அணுகுவது மிக எளிதாக உள்ளது. 3 மாத காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல திட்டங்களை தவெக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த தேர்தலில் மரகதம் குமரவேலை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Source: Read Full Article