இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக, சமீபகாலமாக இந்திய மகளிர் அணி படைத்த சாதனைகள் என்பது மிகப்பெரிய அளவிலானது ஆகும்.

கேப்டன்சியை ராஜினாமா செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்:

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆவார். இந்திய அணிக்காக நீண்ட காலமாக கேப்டன்சியை வகித்து வந்த அவர் தனது கேப்டன்சி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தாலும், வீராங்கனையாக தனது கிரிக்கெட் பயணம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

அதிரடி வீராங்கனை:

37 வயதான ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மூலமாக இந்திய அணிக்காக அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் 2013ம் ஆண்டும், டி20 போட்டியில் 2011ம் ஆண்டு அறிமுகமானார். சிறந்த அதிரடி பேட்டிங் வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுர் 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 541 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக 171 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதம், 24 அரைசதங்கள் எடுத்துள்ளார். 57 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 44 முறை நாட் அவுட்டாக ஆடியுள்ளார். 210 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 346 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், 18 அரைசதங்கள் விளாசியுள்ளார். 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 304 ரன்கள் எடுத்துள்ளார்.

கேப்டனாக சாதித்தது என்ன?

கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவை 5 டெஸ்ட் போட்டிகள், 51 ஒருநாள் போட்டிகள், 155 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2023 மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை இந்திய அணி இவரது தலைமையில் வென்றது.

இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை கடந்தாண்டு வென்றது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலே ஆகும். இந்தியாவிற்காக கபில்தேவ், தோனிக்கு பிறகு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றவரும் ஹர்மன்ப்ரீத் கவுரே ஆவார்.

2022ம் ஆண்டு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றபோதும் அணியை வழிநடத்திய பெருமை இவருக்கேச் சேரும். கேப்டனாக 150 டி20 போட்டிகளில் அணியை வழிநடத்திய முதல் இந்தியர் இவரே ஆவார். ஆடவர் போட்டிகளில் இந்த சாதனையை இதுவரை யாரும் செய்தது இல்லை.

மகளிர் ப்ரீமியர் லீக்கிலும் அசத்தல்:

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிரிதி மந்தனா ஏற்பார் என்று கருதப்படுகிறது. தற்போது 37 வயதான ஸ்மிரிதி மந்தனா மகளிர் ப்ரீமியர் லீக் தொடரிலும் மும்பைக்காக இரு முறை கோப்பையை வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத் கவுரை ஒரு வடிவத்தில் மட்டும் கேப்டன்சியை கவனிக்குமாறு பிசிசிஐ கோரியபோதும் அவர் அணியின் எதிர்காலத்திற்காக மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article