Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி

Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
News Image

Gem Veeramani: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தொழிலதிபர் வீரமணியின் மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

வீரமணி வங்கிக் கணக்குகள் முடக்கம்:

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலபதிபர் ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணமும் உள்ளன. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை தடுக்கும் விதமாகவும், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகவும் வீரமணி மற்றும் அவர் நிறுவனங்கள் சார்ந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு முடக்கியுள்ளது. " ஏற்கனவே சில சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்துள்ளதாகவும், சாட்சிகளைப் பாதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது ஆதாரங்களைத் திரிக்கவோ பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன" எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரமணி மகளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்

இதனிடையே வீரமணியின் மகள் அர்ச்சனா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 23ம் தேதி அன்று சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறிய பிறகு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட அர்ச்சனா, உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததை அடுத்து விசாரிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் நேரில் ஆஜராக சம்மனும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல முயல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. "தன் தந்தை சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவுவதற்காகச் செய்யப்பட்ட சில சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் குறித்து அர்ச்சனாவிற்கு தெரியும் என்று  காவல்துறை நம்புவதே" இந்த நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்

தலைமறைவாகியுள்ள பிரகாஷ் கண்ணையா..!

வீரமணி, அவரது கூட்டாளி சாந்தி மற்றும் பிறர் மீது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்  கீழ் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள் இருக்கலாம் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) கூறியது. சாந்தி உள்ளிட்டோர் தன்னிடம் பணம் பறிப்பதை தனது மகளிடம்  தெரிவித்ததாகவும், பின்பு அர்ச்சனாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே குற்றங்களை மறைக்க பிரகாஷ் கண்ணையாவை நாடியதாகவும் வீரமணி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது கைது நடவடிக்கைக்குப் பிறகு தலைமறைவாகி ஐக்கிய ராஜ்ஜியத்தில் தங்கியிருப்பதாக நம்பப்படும் பிரகாஷ் கண்ணையாவைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

10ம் தேதி வரை சிறை..!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீரமணி மீது இதுவரை 11 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வீரமணியை வரும் நவம்பர் 10ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks