தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் வலுப்பெற்று, மேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அர்னாப் புயலாக வலுப்பெற்றது. தற்போது இது அதி தீவிர புயலாக மாறியதை அடுத்து 140 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அர்னாப் புயல்

அதன்படி இன்று அதிகாலை முதல் அர்னாப் புயல் ஏனாம் அருகே பபாட்லா - விசாகப்படடினம் அருகே 145 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் கரையை கடக்க தொடங்கியது. தற்போது கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் புயலின் பின் பகுதியும் முழுமையாக கரையை கடக்கும். அடுத்த 4 மணி நேரத்தில் தீவிரப்புயலாகவும், 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுவிழக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் கரையை கடந்து வருவதால் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக சுமார் 100 ரயில்கள் மற்றும் 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் வேறொடு சாய்ந்ததை அடுத்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதம் மற்றும் உயிரிழப்பு விவரம் இதுவரை எதுவும் தெரியவில்லை. பொதுமக்களும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் எதிரொலித்த புயலின் தாக்கல்

அர்னாப் புயலின் தாக்கல் நேற்றிரவு எண்ணூர் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை ஓரமுள்ள குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. அலைகளின் ஆக்ரோஷத்தால் வாகனங்கள் கவிழ்ந்தன. இதனால் எண்ணூர் விரைவுச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

As a cyclone prepares to make landfall in Andhra Pradesh tonight, the sea off the coast of Chennai has become turbulent. Seawater has breached the shoreline and entered residential areas. The sea off Ennore is experiencing severe turbulence. In the Bharati Nagar area of Ennore, auto-rickshaws and two-wheelers parked along the coast have been damaged by the sea waves.

— Suresh Elangovan (@sureshelangov12) October 27, 2026

இந்நிலையில் புயல் கரையை கடந்ததை அடுத்து கடல் சீற்றம் குறைந்து காணப்படுகிறது. அர்னாப் புயல் காரணமான சென்னையில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜ முந்திரி இடையே இயக்கப்படும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article